அதிரடியும், சரவெடியுமாக முடிந்திருக்கிறது தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை போட்டியின் முதல் இன்னிங்ஸ். டாஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேட்டிங் பிட்ச் என்பதால் சேஸிங் ஈஸியாக செய்யலாம் என நினைத்து பந்துவீச்சை எடுத்துவிட்டார். ஆனால் தென்னாப்பிரிக்கா அணியில் இருந்த பவர் ஹிட்டர்ஸ், அடிப்பதை தவிர வேறுவழியில்லை என நினைத்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்துவிட்டார்கள். இன்னிங்ஸ் தொடங்கியபோது தென்னாப்பிரிக்கா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் டிகாக் மட்டும் 4 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறிவிட்டார். அடுத்து வந்த டசன், ஹென்றிக்ஸூடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | SL vs NED: இலங்கையின் மோசமான பவுலிங் - 6 விக்கெட்டுக்கு பிறகு கெத்து காட்டிய நெதர்லாந்து..!


இருவரும் சீரான ரன்ரேட்டை கொண்டு சென்றதால் தென்னாப்பிரிக்கா அணி வலுவான ஸ்கோரை நோக்கி சென்றது. ஹென்றிக்ஸ் 85 ரன்களுக்கும், டசன் 60 ரன்களுக்கும் அவுட்டாகினர். ஆனால் பக்கவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். அப்போது ஸ்கோர் 164 ரன்களுக்கு 3 விக்கெட் இருந்தது. இந்தப் போட்டியில் கேப்டனாக களமிறங்கிய ஏய்டன் மார்க்ரம் தனது பங்குக்கு 42 ரன்களுக்கு வெளியேறினார். மில்லர் ஜொலிக்கவில்லை.



ஆனால் கிளாசனும், யான்சென்னும் இங்கிலாந்து பந்துவீச்சை பார்ட்னர்ஷிப் போட்டு சிதறடித்துவிட்டனர். சிக்சரும், பவுண்டரிகளுமாக பந்துகள் அடிக்கடி ரசிகர்களை எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தது. வெளுத்து வாங்கிய கிளாசன் 67 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து அவுட்டானார். 4 சிக்சர்கள் 14 பவுண்டரிகள் அடித்திருந்தார் ஹென்றிக்ஸ். மறுமுனையில் யான்சென் 6 மெகா சிக்சர்களும், 3 பவுண்டரிகளையும் விளாசி 75 ரன்கள் எடுத்தார். இதற்கு மொத்தம் 42 பந்துகளை மட்டுமே யான்சென் எடுத்துக் கொண்டார். முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. 


இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானிடம் தோற்ற பிறகு விளையாடும் போட்டி. தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக தோல்வியை தழுவிய பிறகு விளையாடும் போட்டி. இரண்டு அணிகளும் கத்துக்குட்டி அணிகளிடம் அடி வாங்கியபிறகு சந்திக்கும் போட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிவிட்டது. குறிப்பாக விக்கெட்டுகளை எடுத்த டாப்லி ஓவரில் தான் அதிக ரன்கள். அவர் 8.5 ஓவர்கள் வீசியதில் 88 ரன்கள் எடுத்தது தென்னாப்பிரிக்கா. இதனையடுத்து 400 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களம் கண்டுள்ளது இங்கிலாந்து. உலக கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 400 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக சேஸிங் செய்ததில்லை. அந்த வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பு இப்போது இங்கிலாந்து அணிக்கு கிடைத்திருக்கிறது. 


மேலும் படிக்க | உத்தரவாதம் கொடுக்க முடியாது... ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக சம்பவம் இருக்கு - ரோகித் சர்மா பளீர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ