ஐபிஎல் 2022 ஏலத்தில் அணி மாறிய டாப் கிரிக்கெட்டர்கள்
ஆஸ்திரேலிய சூப்பர் ஸ்டார் பேட்டர் டேவிட் வார்னர் முதல் தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் வரை பல வீரர்கள் இனி அணி மாறி விளையாடுவார்கள்...
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய சூப்பர் ஸ்டார் பேட்டர் டேவிட் வார்னர் முதல் தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் வரை சிலர், இந்த ஏலத்தில் அணி மாறிவிட்டனர். அவர்களில் முக்கியமான வீரர்கள் இவர்களே...
குயின்டன் டி காக் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ 6.75 கோடி
ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில்று, தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்டர் குயின்டன் டி காக்கை ரூ. 6.75 கோடிக்கு (INR 67.5 மில்லியன்) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வாங்கியது. ஏலத்தில் சில வீரர்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டனர்.
தங்களிடம் இருந்த பணத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, லக்னோ அவர்களின் முதல் தேர்வாக தொடக்க ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பரான டி காக்கை வாங்கியது. அவர் விக்கெட் கீப்பிங் அழுத்தத்திலிருந்து கேப்டன் ராகுலை விடுவிப்பார் மற்றும் அணிக்கு வலு சேர்ப்பார் என்று நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | ஐபிஎல் ஏலம் 2022: அதிக விலைக்கு போன டாப் 10 வீரர்கள்!
டேவிட் வார்னர் - டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ 6.25 கோடி
ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னரை டெல்லி கேப்பிட்டல்ஸ் 6.25 கோடி ரூபாய்க்கு (INR 62.5 மில்லியன்) ஏலம் எடுத்தது.
ஐபிஎல் ஜாம்பவான் மற்றும் லீக்கில் சிறந்த வெளிநாட்டு பேட்டர்களில் ஒருவரான வார்னர் பல ஆண்டுகளாக தொடர்ந்து ரன் குவிப்பவராக இருந்து வருகிறார். அவர் 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5449 ரன்களை எடுத்துள்ளார்.
ஐபில் லீக் வரலாற்றில் எந்த சிறந்த ஸ்கோர் எடுத்த வெளிநாட்டு பேட்டர் என்ற பெருமையையும் அவர் பெர்றுள்ளார்.
யுஸ்வேந்திர சாஹல் - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 6.50 கோடி
தற்போது ஐபிஎல்லில் சிறந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான யுஸ்வேந்திர சாஹல் (Yuzvendra Chahal), மெகா ஏலத்தில் ரூ.6.50 கோடிக்கு (INR 65 மில்லியன்) எடுக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
அவரது முன்னாள் அணியான RCBக்காக ஒரு சிறந்த விக்கெட்களை எடுத்தவராக சாஹல் இருந்தார். 114 ஐபிஎல் போட்டிகளில் பங்கு கொண்டு 139 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுவார்.
ஜானி பேர்ஸ்டோவ் - பஞ்சாப் கிங்ஸ் - ரூ 6.75 கோடி
தற்போது லீக்கில் சிறந்த வெளிநாட்டு பேட்டர்களில் ஒருவராக இருக்கும் ஜானி பேர்ஸ்டோவ், பஞ்சாப் கிங்ஸ் அணியால் 6 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். 28 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 41.51 சராசரி மற்றும் 142 ஸ்டிரைக் ரேட்டில் 1038 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் 2022ல் பல்வேறு அணிகள் தேர்வு செய்த வீரர்களில் முதல் பத்துப் இடத்தில் இஷான் கிஷன், தீபக் சாஹர் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதுவரை எந்த ஒரு வீரருக்கும் இல்லாத அளவுக்கு கிஷன் ₹15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் எடுக்கப்பட்டார்.
ALSO READ | IPL Century: சதத்தை தவறவிட்டு 99 ரன்களில் அவுட்டான ஐபிஎல் கிரிக்கெட்டர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR