புதுடெல்லி: ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டி தொடரில் இந்திய வீராங்களை சாய்னா நேஹ்வால் வெற்றியுடன் தொடங்கி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹாங்காங்கில் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேஹ்வால் தாய்லாந்து வீராங்கனை பார்ன்டிப் புரனாப்செர்ட்சுக்கு எதிராக களமிறங்கினார்.


இந்தப் போட்டியில் தொடக்கத்திலேயே தனது ஆதிக்கத்தைச் செலுத்திய சாய்னா முதல் கேமில் 12-21 என எளிதில் கைப்பற்றினார். 


தொடர்ந்து நடந்த இரண்டாவது கேமில் தாய்லாந்து வீராங்கனை பார்ன்டிப் சாய்னாவுக்கு சாய்னா நேஹ்வால் கடும் சவால் கொடுத்தார். இந்த கேமில் சாய்னா 21-19 என இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் இழந்தார். 


ஆட்டம் இறுதி கட்டத்தை நெருங்கும் போது, பார்ன்டிப்க்கு வாய்ப்பே அளிக்காமல் விளையாடிய சாய்னா மூன்றாவது கேமில் 21-17 என கைப்பற்றி வெற்றியை தன் வசப்படுத்தினார்.