ஒரு தலைமுறையின் ஊக்கம் - கோலிக்கு ஹாங்காங் கொடுத்த பரிசு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலிக்கு ஹாங்காங் அணியினர் தங்களது ஜெர்சியை பரிசாக கொடுத்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது இரண்டாவது போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொண்டது. முதலில் ஆடிய இந்திய அணி விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியால் 192 ரன்கள் எடுத்தது. கோலி 59 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அதன் பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில் போட்டி முடிந்ததும் விராட் கோலிக்கு ஹாங்காங் அணி வீரர்கள் தங்கள் அணியின் ஜெர்சியை பரிசளித்தனர். மேலும் அந்த ஜெர்சியில், “ஒரு தலைமுறைக்கே ஊக்கமாக இருந்ததற்கு நன்றி. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என எழுதியிருந்தனர்.
இதனையடுத்து விராட் கோலி தனக்கு பரிசளித்த ஹாங்காங் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, “நன்றி ஹாங்காங். இது என்னை எளியவனாக்கியுள்ளது. மேலும் இனிமையானது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ரோஹித் ஷர்மா கேப்டன்சி இனி அவ்ளோதான் - பாக் வீரர் கருத்து
முன்னதாக இந்தியாவுடனான போட்டி முடிந்த பிறகு ஹாங்காங் அணி வீரர்கள் இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு வந்து இந்திய வீரர்களுடன் கலந்துரையாடி சில யோசனைகளையும் கேட்டுவிட்டு சென்றனர்.
இன்று நடக்கவிருக்கும் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மீண்டும் மோதிக்கொள்ளும் இந்தியா பாகிஸ்தான்! ஆசிய கோப்பையில் சுவாரஸ்யம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ