இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய ஆறு அணிகள் மோதும் 15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானையும், இரண்டாவது போட்டியில் ஹாங்காங்கையும் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.நாளை நடக்கவிருக்கும் சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த பேட்ஸ்மேன் முகமது ஹபீஸ், ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று கூறியிருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், “ரோஹித் வெளிப்படுத்திய உடல் மொழியைப் பாருங்கள், மேட்ச் முடிந்தவுடன் அவரது உடல் மொழி சரியாக இல்லை. டாஸ் போட வரும்போதே ரோஹித் ஷர்மா மந்தமாக வருகிறார். இதே ரோஹித் ஷர்மாதான் சில நம்ப முடியாத அதிரடி இன்னிங்ஸ்களை ஆடியவர். அவரா இவர் என்பது போல் இருக்கிறது கேப்டனான பிறகு அவரது உடல் மொழி.
கேப்டன்சி அவருக்கு சுமையாக இருக்கிறது. அவரது ஃபார்மும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஐபிஎல் தொடரிலும் அவர் மோசம். அதன் பிறகே சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவர் திரும்பியதிலிருந்து அவருக்கு எதுவும் சரியாக அமையவில்லை. ஆனால் அவர் என்னடாவென்றால் ‘நாங்கள் பாசிட்டிவ் கிரிக்கெட் ஆடுவோம்’ அது இது என்று பேசி வருகிறார்.
பேச்சில் தெரியும் பாசிட்டிவ் அவரது செய்கையில் வெளிப்படவில்லை. பாசிட்டிவ் என்று பேசி விடலாம் ஆனால் நடைமுறையில் அதெல்லாம் கடினம். இது என் கணிப்பு அல்ல, அவர் கேப்டன்சியில் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என்று கருதுகிறேன். அவர் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்திருக்கிறேன், ஆனால் இப்போது அவர் தன்னை அம்மாதிரி வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. எதையோ தொலைத்தவர் போல் காணப்படுகிறார். அவர் மீது ஏகப்பட்ட அழுத்தம் உள்ளது, அவருக்காக வருந்துகிறேன்.
முன்னதாக, பாகிஸ்தானுடனான முதல் போட்டியில் ரிஷப் பண்ட்க்கு 11 பேர் கொண்ட அணியில் இடம் கொடுக்கவில்லை. ரோகித் சர்மாவின் இந்த முடிவு பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பண்ட்டுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டிருந்தார் என்பத் குறிப்பிடத்தக்கது. மேலும் ரோஹித்தின் ஃபார்மும் கவைக்குரியதாக இருக்கிறது. எனவே ஹிட்மேன் உடனடியாக ஃபார்முக்கு திரும்பி தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென்று அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata