இந்தியா - நியூசிலாந்து எத்தனை போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன?
இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணி பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.
டெல்லி/இங்கிலாந்து: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள 18வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் மற்றும் நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும். இந்த நாட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இவ்விரு அணிகளும் உலகக்கோப்பையில் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 3 முறை இந்தியாவும் 4 முறை நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 106 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 55 முறையும், நியூசிலாந்தும் 45 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
அதேபோல உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்க்கொள்கிறது. தற்போது வரை உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆடிய லீக் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை சந்தித்த ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காததால், இன்றைய போட்டியின் மூலம் இவ்விரு அணிகளில் உலகக்கோப்பை தொடரில் யார் முதல் தோல்வியை சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.