National Sports Awards News: இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு நாள் (The National sports day) கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து டெல்லி மேஜர் தயான் சந்த் (Dhyan Chand) தேசிய விளையாட்டரங்கில் உள்ள அவரது சிலைக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண்  ரிஜிஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், நல்ல விசியத்தை பற்றி கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகளின் ஏழு பிரிவுகளில் நான்கு பிரிவுகளின் பரிசுத் தொகையை பெருமளவில் உயர்த்துவதாக விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு (Kiren Rijiju) சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 


ALSO READ |  ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரோஹித் ஷர்மா உட்பட ஐந்து வீரர்கள்!!


ராஜீவ் காந்தி கேல் ரத்னா (Rajiv Gandhi Khel Ratna) விருதுக்கான பரிசுத் தொகை முந்தைய ரூ. 7.5 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அர்ஜுனா விருது (Arjuna Award) ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


அதேபோல தியான் சந்த் விருதுக்கான (Dhronacharya Award) பரிசுத் தொகை ரூ .5 லட்சத்திலிருந்து ரூ .10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்.


விளையாட்டு விருதுகளுக்கான (Sports Awards) பரிசுத் தொகை கடைசியாக 2008 இல் மதிப்பாய்வு செய்யப்பட்டது. இந்த தொகைகள் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு துறையிலும் உள்ள வல்லுநர்கள் தங்கள் வருவாயை மேம்படுத்தி வரும் நிலையில், ஏன் எங்கள் விளையாட்டு வீரர்கள் மட்டுமே அல்ல" என்று கிரேன் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.


ALSO READ | National Sports Day: வீரர்களின் உறுதியும், அர்ப்பணிப்பும் மிகவும் உயர்வானது -பிரதமர்


இந்த ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா (Rohit Sharma), மல்யுத்த வீரர் வினேஷ் போகாட் (Vinesh Phogat), மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் (Rani Rampal), துடுப்பாட்ட வீரர் மாணிக்க பத்ரா (Manika Batra) மற்றும் ரியோ பாராலிம்பிக் தங்கம் வென்ற மரியப்பன் தங்கவேலு (Mariyappan Thangavelu) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.


இதுத்தவிர, அர்ஜுனா விருதுக்கு 27 விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 13 பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், மேலும் 15 பேர் தியான் சந்த் விருதுக்கான பட்டியலிடப்பட்டுள்ளனர்.