கோலியை துரத்தும் துரதிருஷ்டம்... மீண்டும் சதம் மிஸ் - மிரட்டும் மதுஷங்கா!
IND vs SL Match Score Update: உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தனது சாதனையை சதத்தை நெருங்கியபோது விராட் கோலி அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
IND vs SL Match Score Update: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) 33ஆவது லீக் போட்டியில், இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அந்த வகையில், ஓப்பனரும், கேப்டனுமான ரோஹித் சர்மா (Rohit Sharma) 4 ரன்களில் மதுஷங்கா வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதன்பின் 150+ ரன்களுக்கு சுப்மான் கில் - விராட் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதில், சுப்மான் கில் (Shubman Gill) 92 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 92 ரன்கள் எடுத்து மதுஷங்காவிடம் ஆட்டமிழந்தார். அதேபோல், மதுஷங்காவின் (Dilshan Madushanka) அடுத்த ஓவரில் விராட் கோலி 88 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 94 பந்துகளில் மொத்தம் 11 பவுண்டரிகளை அடித்திருந்தார்.
மேலும் படிக்க | ஒரே போட்டியில் சச்சின் சாதனையை ஊதி தள்ளிய விராட்.. இன்னும் லிஸ்ட் இருக்கு
ஒருநாள் அரங்கில் சச்சினின் (Sachin Tendulkar) அதிக சதத்தை விராட் கோலி (Virat Kohli) சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக இன்றும் சதத்தை பூர்த்தி செய்யாமல் ஆட்டமிழந்தார், விராட் கோலி. சச்சின் மொத்தம் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை பதிவு செய்துள்ளார். விராட் கோலி இதுவரை 48 சதங்களை பூர்த்தி செய்துள்ளார். சச்சின்தான் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் என்பதால் அவரின் சாதனையை விராட் கோலி முந்திச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.\
இதில், கடந்த சில நாள்களுக்கு முன் தரம்சாலாவில் நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் 95 ரன்களை எடுத்து விராட் கோலி அவுட்டானார். அதுவும் பெரிய ஏமாற்றமாக அமைந்த நிலையில், இன்றைய போட்டியில் கில்லும், விராட்டும் இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். மேலும், இருவரும் சதத்தை நோக்கி பாய்ந்து போய்கொண்டிருந்த நிலையில், கில் 30ஆவது ஓவரிலும், விராட் கோலி 32ஆவது சதத்தை பூர்த்தி செய்யாமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.
இந்திய அணி 32 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை எடுத்திருந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் - கேஎல் ராகுல் களத்தில் உள்ளனர். மதுஷங்கா மொத்த 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இந்தியா நடப்பு தொடரில் முதல்முறையாக 300 ரன்களை தொடும் என எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும் படிக்க | டாஸ் போடும்போது மும்பையில் உணர்ச்சிவசப்பட்ட ரோகித் சர்மா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ