கிளைமேக்ஸில் உலகக் கோப்பை... சாம்பியன் அணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு?
World Cup 2023, Price Amount: இறுதிப்போட்டி பரபரப்பான சூழலில் உலகக் கோப்பை தொடரின் பரிசுத் தொகை குறித்த தகவல்களையும் இதில் காணலாம்.
World Cup 2023, Price Amount: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) அதன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இறுதிப்போட்டியில் அந்த ஒற்றை உலகக் கோப்பைக்காக இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் முட்டி மோத உள்ளன.
IND vs AUS: எந்த அணிக்கு சாதகம்?
2011ஆம் ஆண்டுக்கு பின் உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணியும், 2015ஆம் ஆண்டுக்கு பின் சாம்பியன் பட்டத்தை வெல்ல ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது. இந்திய மண்ணில் நடப்பதால் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் என பலரும் கூறினாலும், அதிக முறை உலகக் கோப்பைகளை வென்றதன் சாதகத்துடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.
போட்டியின் டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்துள்ளது இரு அணிகளும் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இதற்கு முன் இந்திய அணி நடப்பு தொடரில் தோல்வியே இல்லாமல் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா முதலிரு போட்டிகளில் தோல்வியடைந்தாலும் அடுத்த 8 போட்டிகளில் வென்று அசத்தி உள்ளது.
மேலும் படிக்க | இறுதிப்போட்டியில் மேக்ஸ்வெல்லுக்கு தலைவலி கன்பார்ம்... இதுதான் காரணம்!
இறுதிப்போட்டி வரை...
இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் நடப்பு உலகக் கோப்பை தொடரில் போட்டியிட்டன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில், நியூசிலாந்து வீழ்த்தி இந்திய அணியும், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.
பரிசுத்தொகை எவ்வளவு?
இன்றைய போட்டி என்பது பலராலும் எதிர்பார்க்கப்படும் நிலையில், உலகக் கோப்பை தொடரின் பரிசுத் தொகை குறித்த தகவல்களையும் இதில் காணலாம்.
- ஒரு லீக் போட்டியை வெல்லும் அணிக்கு ரூ.33.17 லட்சம் கிடைக்கும்.
- அரையிறுதிக்கு தகுதிபெறதா 6 அணிகளுக்கு (பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து) மொத்தமாக ரூ.82.94 லட்சம் வழங்கப்படும். இதில் 6 பங்கு என்பதை நினைவில் கொள்ளவும்.
- அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த அணிகளுக்கு (நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா) தலா ரூ.6.63 கோடி வழங்கப்படும்.
- இன்றைய இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.16.59 கோடி வழங்கப்படும்.
- இன்றைய இறுதிப்போட்டியில் வென்று உலகக் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.33.18 கோடி வழங்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ