திடீரென ஓய்வை அறிவித்த அதிரடி வீரர்... ஐபிஎல்தான் முக்கிய காரணமா?
Cricket News: தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
Cricket News In Tamil: கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹென்ரிச் கிளாசென் (Henrick Klassen) ஒரு அதிரடி வீரராகதான் தெரியும். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் கிளாசென் ஸ்பின்னரோ அல்லது வேகப்பந்துவீச்சாளரோ கண்ணிமைக்கும் நேரத்தில் பந்தை பவுண்டரிக்கு அனுப்பும் திறன்பெற்றவர் எனலாம். களத்தில் அமைதியாகவும், ஆக்ரோஷமாகவும் செயல்பட கூடியவர் இவர். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு மிடில் ஆர்டரில் பலம் சேர்ப்பவர்களில் கிளாசெனும் ஒருவர்.
4 போட்டிகளில் மட்டும்...
இப்படி தொடர்ந்து வெள்ளை பந்து கிரிக்கெட்டை விளையாடி வரும் ஹென்ரிச் கிளாசென் தற்போது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம், இனி அவர் சர்வதேச அளவில் ஓடிஐ மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார் என தெரிகிறது. குறிப்பாக, ஐபிஎல், எம்எல்சி, Hundred போன்ற உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காகவும் கிளாசென் இந்த முடிவை அறிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
இருப்பினும் அவரின் ஓய்வுக்கு என காரணம் கூறப்படவில்லை. 32 வயதான அவர் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். அதாவது, 2019 முதல் தற்போதுவரை. இவர் கடந்தாண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடினார். அதில் நான்கு இன்னிங்ஸிலும் சேர்த்து அவர் 56 ரன்களைதான் சேர்த்தார். மேலும் ஒட்டுமொத்தமாக அவர் 8 இன்னிங்ஸ்களில் 104 ரன்களைதான் அடித்துள்ளார், அதிகபட்சமாக 35 ரன்களை அடித்திருக்கிறார்.
மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா அணிக்கு கேப்டனாக வரமாட்டார்: ஆகாஷ் சோப்ரா சொல்லும் காரணம்
ஓய்வுக்கு காரணம் என்ன?
மேலும் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. எனினும், தென்னாப்பிரிக்காவின் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், கிளாசெனுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பளிக்கப்படும் என்றே கூறி வந்தார். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிளாசெனுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற முறையில் கைல் வெர்ரியன் சேர்க்கப்பட்டார். இருப்பினும், கிளாசென், கைல் வெர்ரியனை விட சிறந்த பேட்டர் என்ற கான்ராட் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்தாண்டின் பிற்பாதியில் கிளாசென் டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என கூறினார், ஆனால் தற்போது அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.
"நான் சரியான முடிவை எடுக்கிறேனா என்று யோசித்து, சில தூக்கமில்லாத இரவுகளுக்குப் பிறகு, நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தேன். இது ஒரு கடினமான முடிவாகும். ஏனென்றால் இது எனக்கு மிகவும் பிடித்தமான ஃபார்மட்டாகும். ஆடுகளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நான் சந்தித்த போர்கள் என்னை இன்று கிரிக்கெட் வீரராக ஆக்கியுள்ளது. இது ஒரு சிறந்த பயணம் மற்றும் எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது டெஸ்ட் தொப்பிதான் நான் இதுவரை பெற்ற மிகவும் மதிப்புமிக்க தொப்பியாகும்" என ஓய்வு அறிவிப்பு குறித்து கிளாசென் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்ததன் மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. மேலும், அந்த போட்டியோடு தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர பேட்டர் டீன் எல்கர் ஓய்வு பெற்றார். அவருக்கு பின் இந்தாண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவிக்கும் இரண்டாவது மூத்த வீரர் கிளாசென்.
மேலும் படிக்க | ரோஹித் சர்மாவிற்கு தடை விதிக்கும் ஐசிசி? என்ன செய்ய போகிறார் ரோஹித்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ