துபாய்: டி20 உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியின் முன் மண்டியிட்டு, இனவெறிக்கு எதிரான உலகளாவிய இயக்கத்திற்கு (Black Lives Matter) ஆதரவு தெரிவிக்க முடியாது என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான குயின்டன் டி காக்கின் முடிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு போட்டியும் தொடங்கும் முன்பாக வீரர்கள் முழங்காலிட்டு நெஞ்சில் கை வைத்து நிற வெறிக்கு எதிராக உறுதியேற்கிறார்கள். அதேபோல மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிக்கு முன் மண்டியிடுமாறு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அணி வீரர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் டி காக் அந்த உத்தரவை ஏற்க மறுத்து போட்டியில் இருந்து விலகினார்.


அவ்வாறான நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஹென்ரிச் கிளாசெனிடம் ஒப்படைத்தது. ஆனால் டிகாக்கின் இந்த செயலால், தென்னாப்பிரிக்க அணியின் இமேஜ் சுக்குநூறாக உடைந்தது. எழுபதுகளில் நிறவெறி காரணமாக, தென்னாப்பிரிக்க அணி 21 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகி இருக்க வேண்டியிருந்தது. அத்தகைய சூழ்நிலையில், டிகாக்கின் முடிவு பார்த்தால், ஆப்பிரிக்க கிரிக்கெட் மீண்டும் அதே பாதைக்கு திரும்புவதற்கான அறிகுறியாக இது பார்க்கப்பட்டது.


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, தென்னாப்பிரிக்க அணித் தலைவர் டெம்பா பவுமா, கேப்டனாக தனக்கு இது மிகவும் கடினமான நாள் என்று வருத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ |  முகமது ஷமி குறித்து அவதூறு - வெட்கக்கேடானது என கம்பீர் கண்டனம்


நான் இனவாதி இல்லை:
அத்தகைய சூழ்நிலையில், குயின்டன் டி காக் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.  மண்டியிட்டு, இனவெறிக்கு எதிரான உலகளாவிய இயக்கத்திற்கு (Black Lives Matter) ஆதரவு தெரிவிப்பது மூலம் மற்றவர்களுக்கு அது பயன்படுமானால் அதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இப்படி உட்கார மறுத்ததால் தான், தன்னை இனவாதி என்று அழைக்கப்பட்டதாகவும், இது தனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும் டி காக் கூறியுள்ளார்.


கேப்டன் டெம்பாவுக்கு எனது நன்றி:
மேலும் "நான் ஏற்படுத்திய வலி, குழப்பம் மற்றும் கோபத்திற்காக மிகவும் வருந்துகிறேன்," டி காக் கூறினார். இந்த முக்கியமான பிரச்சினையில் இதுவரை நான் அமைதியாக இருந்தேன். ஆனால் இப்போது என் கருத்தை நான் தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். நாம் உலகக் கோப்பையில் விளையாடச் செல்லும் போதெல்லாம், இதுபோன்ற ஒன்று நடக்கும். இது சரியல்ல. எனது அணியினருக்கு குறிப்பாக கேப்டன் டெம்பா அவர்களின் ஒத்துழைப்புக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


ALSO READ |  ஹர்பஜன் - முகமது அமீருக்கு இடையே கடுமையான கருத்து மோதல்; வைரலாகும் ட்வீட்


மேலும் டி காக் கூறுகையில், 'மக்கள் அதை அறியாமல் இருக்கலாம், ஆனால் அவர் ஒரு சிறந்த கேப்டன். அவரும் அணியும் தென்னாப்பிரிக்காவும் என்னுடன் இருந்தால், எனது நாட்டிற்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை என்றார். 


தென்னாப்பிரிக்கா தனது அடுத்த ஆட்டத்தில் இலங்கையை சனிக்கிழமை எதிர்கொள்கிறது. சூப்பர்-12ல் இதுவரை நடந்த இரண்டு ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றி, ஒன்றில் தோல்வி கண்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR