இன்று சென்னை வந்துள்ள எம்.எஸ்.தோனி செய்தியாளர்களிடம் பேசியபோது; சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் சென்னை எனது இரண்டாவது வீடு என்றும் அவர் தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, சென்னை அணிக்கு நான் தேர்வு செய்யப்பட்டதை பெருமையாக நினைக்கிறேன். ரசிகர்கள் அனைவருமே எப்போது சென்னை அணி திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.


எப்போதுமே சென்னை எனக்கு, தனி சிறப்பு வாய்ந்தது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்குதான் அதிக ஸ்கோரை நான் பதிவு செய்தேன். சென்னை அணியின் சிறப்பே, அனைத்து வீரர்களும் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்தும் சூழல் இங்கு எப்போதும் இருக்கும் என்பதுதான். கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும். கடினமான தருணங்களை சிறப்பாக எதிர்கொண்டுள்ளோம்.


நான் விக்கெட் கீப்பராக இருபது அணியை வழிநடத்த உதவும். தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை ஏலத்தில் எடுக்க இருக்கிறோம். இரண்டு வருடங்கள் சென்னை அணிக்காக விளையாட முடியாதது வருத்தம் அளித்தாலும் நிறைய விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது.


அணியில் 18-ல் இருந்து 20 வீரர்களை தேர்வு செய்ய இருக்கிறோம். என்று அவர் தெரிவித்தார். 



இதை தொடர்ந்து இன்று மாலை நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேச இருப்பதாகவும் தோனி தெரிவித்தார்.