ரஜினி படத்தை பார்ப்பதா இல்லையா என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். தடை செய்வதற்கு நீங்கள் யார்? -பிரகாஷ் ராஜ்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. வரும் ஜூன் மாதம் 7-ஆம் தேதி உலக முழுவதும் திரைக்கு வர இருக்கிறது.


இந்நிலையில், கர்நாடகாவில் காலா படத்திற்கு கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது. இது பற்றி கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா ரா கோவிந்த் கூறுகையில், கர்நாடக மாநிலத்தின் நலன் கருதி காலா படத்துக்கு தடை செய்துள்ளதாகவும். இப்படத்தால் காவிரி பிரச்சனையை குறித்து விவகாரம் எழும் என்றும், மாநில நலனுக்காக இதை சித்தாகவும் அவர் தெரிவித்திருந்தார். 


இதை கண்டித்து பலர் கண்டனம் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், #justasking என்ற ஆஸ் டாக்கை பயன்படுத்தி பல்வேறு பல்வேறு பிரச்சனைகளுக்கு கேள்வியும், எதிர்ப்பு தெரிவித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் காலா பட தடை குறித்து ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளார். 


அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளது...! 


நடிகர் ரஜினிகாந்த் தனிநபராக கருத்து சொல்லும் போது நாம் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால், திரைப்படத்தை தடைசெய்யப்படுவது குறித்து தான் மிகவும் வருந்துகிறேன். காலா திரைப்படம் ரஜினி மட்டும் தொடர்புடையது இல்லை. இப்படத்தில் அவருடன் நடித்த நடிகர்கள் முதல் விநியோகஸ்தர் வரை அனைவரும் திரைப்படத்தை தடை செய்வதால் பாதிக்கப்படுகின்றனர். பிரச்னைக்கு இது தான் தீர்வா? அனைவருக்கும் போராட உரிமை உள்ளது. ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க நினைத்து திரைப்படத்தை மக்கள் பார்க்காமல் இருக்கலாம். அப்படிச் செய்தால் தான் மக்கள் எதிர்க்கிறார்களா எனத் தெரியும்.


மக்களுக்கு என்ன தேவை என்பதை கூட சிலரே தீர்மானிக்கின்றனர். இது முற்றிலும் தவறு. சில விளிம்புநிலை அமைப்புகள் என்னை கன்னட எதிரி என கூறலாம். அதற்காக என் கருத்தைக் சொல்லக்கூடாது என்பது கிடையாது. தவறு என்றால் அதை வெளிப்படையாக கூறவேண்டும். நாட்டின் குடிமகன் என்கிற முறையில் எனக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும். ரஜினி படத்தை பார்ப்பதா இல்லையா என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். தடை செய்வதற்கு நீங்கள் யார்? என்று அந்த அறிக்கையில் தெரிவிதத்துள்ளார்.