கடந்த 2012ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் பயணத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.  கடந்த ஆண்டு அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் தடம் பதித்தார்.  U19 மற்றும் மும்பை அணிக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அர்ஜுன் கடந்த ஆண்டு மும்பை அணியில் இடம் பிடித்தார்.  இருப்பினும், அவர் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை.  இந்த ஆண்டும் ஏலத்தில் மும்பை அணி அர்ஜுனை 30 லட்சத்திற்கு எடுத்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சாஹர்க்கு 14 கோடி, தோனிக்கு 12 கோடி - ஐபிஎல் சுவாரசியங்கள்!


சச்சின் சமீபத்திய நேர்காணலில், அர்ஜுன் விளையாடுவதை தான் பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார். அர்ஜுன் சுதந்திரமாக விளையாட வேண்டும் என்றும், குறிப்பாக அவரது தந்தையின் கண்காணிப்பில் எந்த ஒரு அழுத்தத்திலும் இருக்க விரும்பவில்லை என்றும் சச்சின் கூறியுள்ளார்.  இருப்பினும், சில போட்டிகளை சில சமயங்களில் யாருக்கும் தெரியாமல் பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 



"அப்பாவும் அம்மாவும் தனது பிள்ளைகள் விளையாடுவதைப் பார்க்கும்போது மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர், அதனால்தான் அர்ஜுன் விளையாடுவதை நான் பார்ப்பதில்லை.  ஏனென்றால் கிரிக்கெட்டைக் காதலிக்க, அதில் முழு கவனம் செலுத்த அவருக்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் நேரில் சென்று அர்ஜுன் விளையாடுவதைப் பார்க்க மாட்டேன், அவன் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.  சில சமயங்களில் பார்த்தாலும் யாருக்கும் அது தெரியப்போவது இல்லை" என்று சச்சின் கூறினார்.



கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக உள்ள அர்ஜுன் தற்போது வரை, சில டி20 போட்டிகளில் விளையாடி, 9.57 என்ற சதவீதத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில், இரண்டு இன்னிங்ஸிலும் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இன்னும் ஐபிஎல்லில் ஒரு போட்டியில் கூட அறிமுகமாகவில்லை. கடந்த சீசனில் MI அவரை ₹20 லட்சத்திற்கு வாங்கியது, இந்த சீசனில் ₹30 லட்சத்திற்கு மீண்டும் வாங்கியுள்ளது.


மேலும் படிக்க | IPL 2022: ஏலத்தில் கோடிக்கணக்கில் விலை போன மேத்யூ கவுண்டி கிரிக்கெட்டில் இருந்து விலகினாரா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR