வரும் 2020-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள t20 உலக கோப்பைக்கு நேரடியாக தேர்வாகியுள்ள 8 கிரிக்கெட் அணிகளை ICC அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ICC t20 ஆடவர் உலக கோப்பை போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைப்பெற்று வருகிறது. முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைப்பெற்ற t20 உலக கோப்பை போட்டிக்கு பின்னர், 2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் அடுத்த t20  உலக கோப்பை தொடரை நடத்த ICC திட்டமிட்டது. 


ஆனால் 2017-ஆம் ஆண்டு நடைப்பெற்ற ICC சாம்பியன்ஸ் ட்ரோப்பி போட்டிக்கு பின்னர், அடுத்த t20 உலக கோப்பை தொடர் 2020-ஆம் ஆண்டு t20 உலக கோப்பை நடைப்பெறும் எனவும், இப்போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் எனவும் ICC அறிவித்தது.



இந்நிலையில் தற்போது இத்தொடரில் விளையாட நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 அணிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா அணியை தவிர, ICC தரவரிசையில் அடிப்படையில் மீதமுள்ள 9 அணிகள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த 10 அணிகளில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் சூப்பர் 12 போட்டிகளில் நேரடியாக விளையாடுவர், மீதமுள்ள இரண்டு அணி தேர்வு சுற்றில் பங்கேற்று வரும் அணிகளுடன் விளையாடி இறுதி கட்டத்தை நோக்கி பயணிப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி முன்னாள் சாம்பியனான இலங்கை, வங்கதேச அணிகள் குவாளிப்பையர் 6-ல் பங்கேற்று சூப்பர் 12-க்கு முன்னேறுவர். இப்போட்டிகள் வரும் அக்டோபர் 18 - நவம்பர் 15 வரை நடைப்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


ICC அணிகள் தரவரிசை (t20)


  • பாக்கிஸ்தான்

  • இந்தியா

  • இங்கிலாந்து

  • ஆஸ்திரேலியா

  • தென்னாபிரிக்கா

  • நீயூசிலாந்து

  • மேற்கிந்திய தீவு

  • அப்கானிஸ்தான்

  • இலங்கை

  • வங்கதேசம்.