சாம்பியன்ஸ் டிராபி 2017 கிரிக்கெட்டில் லீக் சுற்றுக்கான ஆட்டம் இன்றுடன் நிறைவடைகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்டிப்பில் இன்று நடக்க இருக்கும் கடைசி லீக் போட்டியில் இலங்கையும், பாகிஸ்தானும் (பி பிரிவு) மோதுகின்றன. 


தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் 96 ரன் வித்தியாசத்தில் தோற்ற இலங்கை அணி அடுத்து இந்தியாவிடம் 322 ரன்களை எடுத்து சாதனை படைத்தது. 


இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். இதனால் இரு அணி வீரர்களும் களத்தில் வரிந்து கட்டி நிற்பார்கள். 


இவ்விரு அணிகளும் இதுவரை 147 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 84-ல் பாகிஸ்தானும், 58-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. 4 ஆட்டங்களில் முடிவில்லை.