ஐசிசி நடத்தும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டனில் தொடங்கியது. இந்த தொடரை இங்கிலாந்து நடத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 2 பிரிவாக(‘ஏ’ , ‘பி’)  பிரிக்கப்பட்டுள்ளது. 


‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.


சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெறும் 3-வது லீக்கில் இலங்கையும், தென்ஆப்பிரிக்காவும் (பி பிரிவு) மோதின.


இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசியது. இலங்கைக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியில் ஹசிம் ஆம்லா சதம் அடித்து அசத்தினார். 


இதனையடுத்து 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 41.2 ஓவர்களில் 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. அந்த அணியில் அதிகபட்சமாக தரங்கா 57 ரன்கள் எடுத்தார்.