ஐசிசி சாம்பியன்ஸ் கடைசி பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் இந்தியா இன்று மோதுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது.


வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக உள்ளது.வங்கதேச அணி சிறந்த திறனை வெளிப்படுத்தக்கூடிய அணியாகும். வேகப் பந்து வீச்சாளர்களான முஸ்டாபிஸூர் ரஹ்மான், ரூபல் ஹொசைன், தஸ்கின் அகமது, மோர்டசா ஆகியோர் எதிர்பார்ப்பதை விட சிறப்பாக செயல்படக்கூடியவர்கள்.


இன்றைய ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்கட்சியில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும்.


இந்தியா அணி:


விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.


வங்கதேசம் அணி:


மஷ்ரஃப் மோர்டாசா (கேப்டன்), இம்ருல் கெய்ஸ், மஹ்மதுல்லா, மெகதி ஹசன் மிராஜ், மோசடெக் ஹோசைன், முஸ்பிஹூர் ரகிம், முஸ்டாபிஸூர் ரஹ்மான், ரூபல் ஹோசைன், சன்ஜாமுல் இஸ்லாம், சபிர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம், ஷாகிப் அல்-ஹசன், சவுமியா சர்க்கார், தமிம் இக்பால், தஸ்கின் அகமது.