அரையிறுதி 2: இறுதிப்போட்டியை நோக்கி இங்கிலாந்து அணி.....
இன்றைய இரண்டாம் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இங்கிலாந்து அணியும் மோத உள்ளன.
18:44 11-07-2019
இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் இரண்டாவது அரை இறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 85 ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷீத் தலா 3 விக்கெட்டையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணி களம் காண உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி இறுதிபோட்டிக்கு செல்லும்.
18:33 11-07-2019
47.1 ஓவரில் எட்டாவது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா அணி. நன்றாக ஆடி வந்த ஸ்டீவன் ஸ்மித் 85 ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார்
15:31 11-07-2019
மூன்றாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்த விக்கெட்டை கிறிஸ் வோக்ஸ் கைப்பற்றினார்.
15:16 11-07-2019
இரண்டாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி. அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 9 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் அவுட் ஆனார்.
15:10 11-07-2019
முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா. அந்தஅணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ரன் எடுத்தும் எடுக்காமல் அவுட் ஆனார்.
14:40 11-07-2019
இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்றுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
பிர்மிங்காம்: உலகக் கோப்பை தொடரில் ரவுண்ட் ராபின் சுற்றுகள் முடிவடைந்து 4 அணிகள் அரையிறுதிக்கு நுழைந்தன. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவை வென்ற நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.
முதல் அரையிறுதி போட்டி முடிந்த நிலையில், இன்று (ஜூலை 11) இரண்டாவது அரையிறுதி போட்டி பிர்மிங்காம் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதில் இரண்டாம் இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா அணியும், மூன்றாம் இடத்தை பிடித்த இங்கிலாந்து அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி ஜூலை 14 ஆம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.
உலகக் கோப்பை தொடரை பொருத்த வரை ஆஸ்திரேலியாவின் கை தான் ஓங்கி இருக்கிறது. அதாவது இதுவரை இரு அணிகளும் உலகக் கோப்பையில் 8 முறை மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 6 முறையும், இங்கிலாந்து 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
அதேபோல சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் 148 போட்டிகளில் சந்தித்துள்ளன. அதில் ஆஸ்திரேலியா 82 முறையும், இங்கிலாந்து 61 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு போட்டிகள் டை ஆனது. மூன்று போட்டிகளில் முடிவு இல்லை.
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் குவாஜா, ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்ச் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, நாதன் கூல்டர் நைல்.
இங்கிலாந்து: ஈயன் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் / லியாம் பிளங்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத்.