சாம்பியன்ஸ் டிராபி, அரையிறுதி 1: இங்கிலாந்து அணி `பேட்டிங்`
சாம்பியன்ஸ் டிராபி 2017 போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, வங்காளதேசம், ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறினார்கள்.

இந்நிலையில் கார்டிப்பில் இன்று நடக்கும் முதலாவது அரைஇறுதி போட்டியில் இங்கிலாந்தும், பாகிஸ்தானும் மோதுகின்றனர்.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி களமிறங்கவுள்ளது.
இங்கிலாந்து அணி:
அலெக்ஸ் ஹாலெஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, அடில் ரஷித், பிளங்கெட், மார்க் வுட், ஜாக் பால்.
பாகிஸ்தான் அணி:
அசார் அலி, பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), இமாத் வாசிம், முகமது அமிர், பஹிம் அஷ்ரப் அல்லது ஷதப் கான், ஹசன் அலி, ஜூனைட் கான்.