இந்திய அணிக்கு சிம்மசொப்பனமாக இருந்தவருக்கு விருது; ஏமாற்றம் அடைந்த பும்ரா!
ஜஸ்பிரித் பும்ராவுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்பை பொய்யாகி இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் தேர்வு செயப்பட்டுள்ளர்.
துபாய்: இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் (Joe Root) மற்றும் அயர்லாந்து ஆல்-ரவுண்டர் எமியர் ரிச்சர்ட்சன் (Eimear Richardson) ஆகியோர் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராகவும், சிறந்த வீராங்கனையாகவும் ஐசிசி தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை (ICC Player of the Month) ஐசிசி தரப்பில் வெளியிடப்பட்டது. அதில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடியின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்தமுறை ஜஸ்பிரித் பும்ராவுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்பை பொய்யாகி இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் தேர்வு செயப்பட்டுள்ளர். அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பும்ராவுக்கு ஏமாற்றம்:
இந்த தகவலை ஐசிசி இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி (Shaheen Afridi) ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் இந்த விருதை வென்றார், அவர் ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் 507 ரன்கள் குவித்தார்.
ஜோ ரூட்டின் சிறப்பான பேட்டிங்:
ஐசிசி வாக்களிப்பு அகாடமியின் பேனலிஸ்டுகளில் ஒருவரான முன்னாள் தென்னாப்பிரிக்கா ஆல்-ரவுண்டர் ஜேபி டுமினி, "கேப்டனாக, அவர் தோளில் மிகப்பெரிய ஒரு பொறுப்பு இருந்தது. அதன் பிறகும் அவர் அற்புதமாக பேட்டிங் செய்தார். அவர் முன்னேறி அணியை வழிநடத்தி உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆனது என்னை மிகவும் கவர்ந்தது எனக் கூறியுள்ளார்.
ALSO READ | கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகுகிறாரா?
இமிர் ரிச்சர்ட்சனுக்கு விருது:
ஐரிஷ் ஆல்-ரவுண்டர் எமியர் ரிச்சர்ட்சன் (Eimear Richardson) கடந்த மாதம் ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பை ஐரோப்பா தகுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடினார். இதன் காரணமாக அவர் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவர் போட்டியில் 4.19 சராசரியுடன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நெதர்லாந்துக்கு எதிரான அற்புதமான இன்னிங்ஸ்:
அயர்லாந்தின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எமியர் ரிச்சர்ட்சன் பேட்டிங் மற்றும் பவுலிங் மூலம் ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கினார். அவர் நெதர்லாந்துக்கு (Netherlands) எதிரான கடைசி போட்டியில் 49 பந்துகளில் 53 ரன்கள் என்ற முக்கியமான இன்னிங்ஸை அணிக்காக ஆடினார். அந்தத்தொடரில் மொத்தம் 76 ரன்கள் அவர் எடுத்தார்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்தியா இமிர்:
சிறந்த வீராங்கனையாக தேர்வு (ICC Women’s Player of the Month) செய்யப்பட்டதைக் குறித்து பேசிய இமீர், "ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி மகளிர் விளையாட்டு வீரருக்காக பரிந்துரைக்கப்பட்டது மிகவும் உற்சாகமாக இருந்தது, இப்போது நான் ஒரு வெற்றியாளராக உணர்கிறேன். ஐரோப்பிய தகுதிச் சுற்றில் அணிக்காக பங்களிப்பு செய்தது மிகவும் மகிழ்சியாக இருந்தது. அடுத்த கட்டத்திற்கு முன்னேற நாங்கள் நிறைய உழைத்திருக்கிறோம். நாங்கள் சர்வதேச அளவில் மீண்டும் பங்கேற்போம் என உற்சாகமாக் கூறினார்.
ALSO READ | இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட இப்போது வாய்ப்பே இல்லை"
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR