WTC Table: டாப் 5-ல் வங்கதேசம், SA -ன் பரிதாபநிலை..! அப்போ இந்தியா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் தற்போதைய சாம்பியன் நியூசிலாந்தை வீழ்த்திய வங்கதேசம் டாப் 5-க்கு முன்னேறியுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேசம் அணி, அந்த அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது போட்டியில் வங்கதேசம் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. மவுண்ட் மவுன்கானூய் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என அபாரமாக செயல்பட்ட அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. தற்போதைய டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.
ALSO READ | லெஜண்ட்ஸ் லீக்: சச்சின் இல்லாத இந்திய அணி..!
இந்த வெற்றியின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற சாதனையை வங்கதேசம் படைத்துள்ளது. மேலும், டெஸ்ட் சாம்பியஷிப் புள்ளிப் பட்டியலிலும் டாப் 5-க்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு பேஓவல் மைதானத்தில் தங்கள் டிரஸிங் ரூமுக்கு சென்ற வங்கதேச அணியினர், வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.
ஐசிசி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புள்ளி விவர பட்டியலில் 36 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது மற்றும் 3வது இடங்களில் முறையே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருக்கின்றன.
இந்தியா 4வது இடத்தில் உள்ளது. 6வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், தற்போதைய டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து அணி 7வது இடத்திலும் உள்ளன. 6 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 8வது இடத்திலும், புள்ளிக் கணக்கை தொடங்காத தென்னாப்பிரிக்கா அணி 9வது இடத்திலும் இருக்கின்றன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR