ஐசிசி தரவரிசைப் பட்டியல்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒருநாள் போட்டி வீரர்களின் சமீபத்திய தரவரிசைப் பட்டியலை இன்று (அக்டோபர் 18, புதன்கிழமை) வெளியிட்டது. இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் விராட் கோலி சற்று சறுக்கி ஒரு இடம் பின்தங்கி உள்ளார். விராட் கோஹ்லி ஏழாவது இடத்தில் இருந்து எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அவர் 711 புள்ளிகள் பெற்றுள்ளார். அதேநேரத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) நான்கு இடங்கள் முன்னேறி 6வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று (புதன்கிழமை) ஐசிசி வெளியிடப்பட்ட சமீபத்திய ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் (Men's ODI Player Rankings) முதல் 10 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போதைய தரவரிசையில் சுப்மான் கில் இரண்டாவது இடத்திலும், ரோஹித் 6வது இடத்திலும், விராட் கோலி 9வது இடத்திலும் உள்ளனர்.


ஒருநாள் போட்டி வீரர்களின் தரவரிசை (ODI Batting Rankings)


ரோஹித் சர்மா 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். அவர் 719 புள்ளிகளை பெற்றுள்ளார். ரோஹித் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 131 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 86 ரன்களும் எடுத்தார். 711 புள்ளிகள் பெற்று விராட் கோஹ்லி (Virat Kohli) எட்டாவது இடத்தில் உள்ளார். 2023 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கோஹ்லியால் 16 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கோலியின் இடத்தில் தவிர இங்கிலாந்தின் டேவிட் மிலனும் உள்ளார். அவரும் 711 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இந்தியாவின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் (Shubman Gill) 818 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். டெங்குவில் இருந்து மீண்ட பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக 16 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (Babar Azam) முதலிடத்தில் உள்ளார். இவர் 836 புள்ளிகளை பெற்றுள்ளார். அகமதாபாத் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக பாபர் 50 ரன்கள் எடுத்தார்.



மேலும் படிக்க - பந்துவீசும் ரோஹித்... அப்ப இவருக்கு கிடைக்கப்போகுது வாய்ப்பு - சிக்ஸர் மழைக்கு ரெடியா?


ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டம் தொடர்கிறது


இந்த உலகக் கோப்பையில் ரோஹித் அபாரமான ஃபார்மில் உள்ளார். அவர் மூன்று போட்டிகளில் 217 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும். பாகிஸ்தானுக்கு எதிராக ரோஹித் 86 ரன்கள் எடுத்திருந்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 131 ரன்கள் எடுத்தார். ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா ஆவார். இவர் உலகக் கோப்பையில் ஏழு சதங்கள் அடித்துள்ளார். சச்சினின் 6 சதங்களை முறியடித்து முதலிடத்தில் உள்ளார்.


ஒருநாள் போட்டி பந்துவீச்சு தரவரிசை (ODI Bowling Rankings)


அதேசமயம், பந்துவீச்சு தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் முதலிடத்தில் நீடிக்கிறார். ஹேசில்வுட் தற்போது 660 புள்ளிகளை பெற்றுள்ளார். நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் இரண்டாவது இடத்திலும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் (Mohammed Siraj) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்தின் பாஸ்சர் டிரென்ட் போல்ட் நம்பர் ஒன் இடைத்தை பிடிப்பதற்கு மிக அருகில் இருக்கிறார். இவர் 659 புள்ளிகளை பெற்றுள்ளார். 


இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) 641 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தில் உள்ளார். அதேபோல இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (ஏழு இடங்கள் முன்னேறி), தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா (ஒரு இடம் முன்னேறி) கூட்டாக 14வது இடத்தில் உள்ளனர். ஒருநாள் பவுலிங் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பந்துவீச்சளர்கள் இடம் பெற்றுள்ளனர்.


மேலும் படிக்க - ஷகீன் அப்ரிடிக்கு இன்னொரு பேரிடி..! பாகிஸ்தான் கிளம்புகிறார்? இதுதான் விஷயம்


ஒருநாள் போட்டி ஆல்ரவுண்டர் தரவரிசை (ODI All-Rounder Rankings)


ஒருநாள் போட்டி ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டும் இடம் பிடித்துள்ளார். முதலிடம் வங்காளதேச அணியை சேர்ந்த ஷகிப் அல் ஹசன் 343 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இந்தியாவை பொறுத்த வரை ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) 229 புள்ளிகள் பெற்று 9வது இடத்தில் இடம் பெற்றுள்ளார்


உலகக்கோப்பை 2023: ஆதிக்கம் செலுத்தும் இந்தியா 


இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த முதல் போட்டியிலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் அபார வெற்றியை பதிவு செய்தது. மேலும் நாளை இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதவுள்ளன.


மேலும் படிக்க - IND vs BAN: முகமது ஷமி வங்கதேச போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ