அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐந்தாவது டி 20 போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரை வென்றது.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் ஆடுகளம் தொடர்பாக ஐ.சி.சி தற்போது தனது தரக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான பகல்-இரவு டெஸ்டுக்கு ‘சராசரி’என்றும், சர்வதேச டி 20 போட்டிகளுக்கு ‘மிகவும் ஏற்றது’என்றும் தெரிவித்துள்ளது.
உலக கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) இறுதிப் போட்டி, சவுத்தாம்ப்டனின் ஏகாஸ் பவுல் மைதானத்தை இறுதி செய்துள்ளது. ஜூன் 18 முதல் ஜூன் 22 வரை நடைபெறும் இறுதிப் போட்டி இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் நடைபெறும்.
டெஸ்ட் போட்டி தொடங்கிய இரண்டு நாட்களுக்குள் Pink Ball Test முடிந்ததும், மோட்டேரா மைதானத்தில் இந்த போட்டிகள் நடத்துவது தொடர்பான பல்வேறு விமர்சனங்களும், ஏராளமான குறைபாடுகளுக்கும் மத்தியில், நான்காவது போட்டி Pink Ball Test போட்டியாக விளையாடும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலியை ட்ரோல் செய்துள்ளது ICC. கிரிக்கெட் வாரியம் ஒரு வீரரை ட்ரோல் செய்வது நகைச்சுவைக்காக இருந்தாலும், அது கண்ணியமான நடைமுறை அலல என பெரும்பாலனவர்கள் கருதுகிறார்கள்.
வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் Shakib Al Hasan கிரிக்கெட்டில் புதிய சாதனை செய்திருக்கிறார். ஓராண்டு தடைக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் களம் இறங்கியிருக்கிறார் ஷாகிப்
ICC Awards 2020: தசாப்தத்தின் சிறந்த உத்வேக கிரிக்கெட் வீரராக தோனி (Mahendra Singh Dhoni) தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த விருதுக்கு எம்.எஸ்.தோனி மிகவும் சரியானத் தேர்வு என சமூக வலைத்தளங்களில் ஐ.சி.சி அமைப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மகுடத்தில் மற்றும் ஒரு வைரக் கல் சேர்ந்துள்ளது. ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் கேப்டனாக சிறந்த முறையில் செயல்பட்டார் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) என்று ஐ.சி.சி (ICC) வெளியிட்ட பட்டியல் கூறுகிறது. சில இந்திய வீரர்களும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையை வெளியிட்டது. பேட்ஸ்மென்களுக்கான தர வரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 2020 தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகக் குழுவின் தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தினார்.
பிராட்காஸ்டர் (Broadcaster) ஸ்டார் இந்தியா மற்றும் உரிமையாளர்கள் தரப்பில் ‘இந்த ஐபிஎல் 2020 தொடர் நடத்தப்படும் நாட்கள் குறித்து வெளியான தகவல்களை பார்த்தால், அது எங்களுக்கு உடன்பாடு இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ளது