t20 உலகக்கோப்பை 2020: வெவ்வேறு பிரிவில் இந்தியா-பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணையை ICC இன்று வெளியிட்டது
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணையை ICC இன்று வெளியிட்டது
டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கு உலக கோப்பை போட்டிகள் என்ற நடைமுறை இருந்துவந்த நிலையில் கடந்த 2007-ஆம் ஆண்டு t20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை ICC 2007-ல் அறிமுகப்படுத்தியது. அறிமுக உலகக்கோப்பையிலேயே இந்தியா சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியாவை தொடர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு பாகிஸ்தான், 2010-ஆம் ஆண்டு இங்கிலாந்து, 2012-ஆம் ஆண்டு வெஸ்ட்இண்டீசும், 2014-ஆம் ஆண்டு இலங்கையும், 2016-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசும் உலகக்கோப்பையை கைப்பற்றியது. 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைப்பெற்ற t20 உலக கோப்பை போட்டிக்கு பின்னர், 2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் அடுத்த t20 உலக கோப்பை தொடரை நடத்த ICC திட்டமிட்டது.
ஆனால் 2017-ஆம் ஆண்டு நடைப்பெற்ற ICC சாம்பியன்ஸ் ட்ரோப்பி போட்டிக்கு பின்னர், அடுத்த t20 உலக கோப்பை தொடர் 2020-ஆம் ஆண்டு t20 உலக கோப்பை நடைப்பெறும் எனவும், இப்போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் எனவும் ICC அறிவித்தது.
அதன்படி 7-வது t20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு (2020) அக்டோபர் 18-ஆம் நாள் முதல் நவம்பர் 15-ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது.
உலககோப்பை தொடரில் விளையாடும் 10 அணிகளில் ஆஸ்திரேலியா அணியை தவிர, ICC தரவரிசையில் அடிப்படையில் மீதமுள்ள 9 அணிகள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த 10 அணிகளில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் சூப்பர் 12 போட்டிகளில் நேரடியாக விளையாடுவர், மீதமுள்ள இரண்டு அணி தேர்வு சுற்றில் பங்கேற்று வரும் அணிகளுடன் விளையாடி இறுதி கட்டத்தை நோக்கி பயணிப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முன்னாள் சாம்பியனான இலங்கை, வங்கதேச அணிகள் குவாளிப்பையர் 6-ல் பங்கேற்று சூப்பர் 12-க்கு முன்னேறுவர்.
மேலும் தரவரிசையில் முதல் 2 இடங்களில் இருப்பதால் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெறாமல், இரண்டு வெவ்வேறு பிரிவில் இடம்பெற்று விளையாடுகின்றன. இதன் காரணமாக வரும் உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதாமல் இருக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
பிரிவு வாரியாக அணிகள் விவரம்...
‘A’ பிரிவு: பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, தகுதிபெறும் அணிகள்.
‘B’ பிரிவு: இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், தகுதிபெறும் அணிகள்.
இந்தியா விளையாடும் போட்டிகள் விவரம்:
அக்டோபர் 24 : இந்தியா- தென்ஆப்பிரிக்கா.
அக்டோபர் 29 : இந்தியா- தகுதி பெறும் அணி (ஏ-2).
நவம்பர் 1 : இந்தியா- இங்கிலாந்து.
நவம்பர் 5 : இந்தியா- தகுதிபெறும் அணி (பி-1)
நவம்பர் 8 : இந்தியா- ஆப்கானிஸ்தான்.