ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது ஆஸ்திரேலியாவலில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வானிலை பெரும் பங்கு வகித்து வருகிறது. இதுவரை மழை காரணமாக மூன்று போட்டிகள் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே போட்டி தொடர் மழை காரணமாக கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. இங்கிலாந்து - அயர்லாந்து போட்டியில் மழை காரணமாக டிஎல்எஸ் முறையில் இங்கிலாந்து படுதோல்வியை சந்தித்தது. 


எனவே, ஆஸ்திரேலியாவில் மழை பெய்யக்கூடாது என உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தினமும் வேண்டிக்கொண்டிருக்கின்றனர். மழை மட்டுமின்றி, குளிரும் அங்கு வாட்டி வதைக்கிறது. பெர்த்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், பேட்டிங்கின்போது, பெவிலியனில் இந்திய வீரர்கள் நடுங்கிக்கொண்டிருந்த காட்சிகள் அங்கு நிலவும் குளிரை பார்வையாளர்களுக்கே உணரச்செய்தது. மேலும், அங்கு 14 டிகிரி செல்ஷியஸ் முதல் 12 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் நிலவியது. 


மேலும் படிக்க | கோலியின் ஹோட்டல் அறைக்குள் நுழைந்த நபர்! கடுப்பில் விராட் செய்த காரியம்!


அந்த வகையில், நேற்று பெர்த்தில் நடைபெற்ற பாகிஸ்தான் - நெதர்லாந்து போட்டியில் வானிலை குறித்து அறிவிக்க, செய்தியாளர் மைதானத்தில் மேல் கூரையில் ஏறி நின்று பேசியது பலரின் கவனத்ததை ஈர்த்துள்ளது. 



ஐசிசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்ட, போட்டியைக் காண அருமையான இடம் என வீடியோ கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளது. மேலும், மேகத்தில் இருந்து வர்ணனை என வீடியோவில் குறிப்பிட்டுள்ளது.


அந்த வீடியோவில், செய்தியாளர் ஜெர்மானோஸ், ஒளிப்பதிவாளருடன் பெர்த் ஆப்டஸ் மைதானத்தின் மேல் கூரையில் ஏறி நின்று வர்ணனையில் ஈடுபட்டார். அங்கிருந்து வர்ணனை செய்து அருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார். 


"இங்கு சற்று குளிராக இருக்கிறது. ஆனால், இங்கிருந்து இந்த பிரம்மாண்ட மைதானத்தை நீங்கள் பார்க்கும்போது, அதெல்லாம் உங்களுக்கு பெரிதாக தெரியாது. எனது இடது புறத்தில், மட்டகர்ப் பாலம் இருக்கிறது. வலது புறத்தில், போட்டி நடைபெறும் ஆடுகளம் உள்ளது. 


இங்கு காற்று அதிகம் இருந்தாலும், மிக சிறப்பான உணர்வை அளிக்கிறது. நீண்ட காலத்திற்கு இது எனது நினைவில் இருக்கும்" என்று ஜெர்மானோஸ் மகிழ்ச்சி வெள்ளத்தில் கூறினார். ஐசிசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சில மணிநேரங்களில் இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. 


மேலும் படிக்க | Wacth Video : கோலி, ரோஹித் செய்த தவறுகள் - அடுத்தடுத்த ஓவரில் வெற்றியை கோட்டை விட்ட இந்தியா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ