ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ரூப் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில், இரண்டாவது பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கான போட்டிகள் இன்று நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில், பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இந்தியா - தென்னாப்பிரிக்க போட்டியில், இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ரோஹித் - ராகுல் ஜோடி ஓப்பனர்களாக களமிறங்க, பார்னல் வீசிய முதல் ஓவர் மெய்டன் ஆனது. 


முதல் நான்கு ஓவரில் 21 ரன்களை இந்த ஜோடி எடுத்தது. இங்கிடி வீசிய 5ஆவது ஓவர் இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. அந்த ஒரே ஓவரில், ரோஹித் 15 (14) ரன்களுக்கும், கேஎல் ராகுல் 9 (14) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 


மேலும் படிக்க | 2023 ஏலத்தில் ஜடேஜா உட்பட CSK கழட்டிவிடப்போகும் 3 முக்கிய வீரர்கள்!



தொடர்ந்து, இங்கிடி வீசிய 7ஆவது ஓவரில், கோலி 12 (11) ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தார். நோர்க்கிய வீசிய 8ஆவது ஓவரில், ஹூடா டக்-அவுட்டாக, இங்கிடி வீசிய 9ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா 2 (3) ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால், 8.3 ஓவர்களில் இந்தியா 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 


அந்த நிலையில் இருந்து சூர்யகுமார் - தினேஷ் கார்த்திக் ஜோடி சற்று ரன்களை எடுத்தனர். தினேஷ் தடுமாறினாலும், சூரியகுமார் சூறாவளியாக பறந்து ரன்களை குவித்தார். இங்கிடி வீசிய 15ஆவது ஓவரில் தலா 1 சிக்ஸர், 1 பவுண்டரியை பறக்கவிட்டு சூர்யகுமார் யாதவ் தனது அரைசதத்தை பதிவு செய்தார். 


இருப்பினும், தினேஷ் கார்த்திக் 6 (15) ரன்களில் வெளியேற, அஸ்வின் களம் புகுந்தார். அவரும் சற்று நேரம் தாக்குபிடித்த நிலையில், பர்னால் வீசிய 19ஆவது ஓவரின் முதல் பந்தில் அவர் 7 (11) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதே ஓவரின் ஐந்தாவது பந்தில், அதிரடி காட்டி வந்த சூர்யகுமார் 68 (40) ரன்களில் ஆட்டமிழக்க, அது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போட்டி முடிய 7 பந்துகள் மட்டுமே இருந்த நிலையில், சூர்யகுமார் ஆட்டமிழந்தது சுமார் 10-15 ரன்களை இந்திய அணியின் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கோரில் இருந்து குறைந்தது. 



கடைசி ஓவரில் ஷமி ரன் அவுட்டாக, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்தது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சில் இங்கிடி 4 விக்கெட்டுகளையும், பர்னால் 3 விக்கெட்டுகளையும், நோர்க்கியா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.


இப்போட்டியில், விராட் கோலி 12 ரன்களை எடுத்ததன் மூலம், டி20 உலகக்கோப்பை தொடர்களில் 1000 ரன்களை எடுத்து புதிய மைல்கல்லை அடைந்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்தனேவுக்கு அடுத்து, டி20 உலகக்கோப்பையில் 1000 ரன்களை கடக்கும் இரண்டாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். டி20 உலகக்கோப்பையில் அதிக போட்டிகளை விளையாடிவர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். 


ஸ்கோர் அப்டேட் : தென்னாப்பிரிக்கா 6 ஓவர்கள் - 24/3 (அர்ஷ்தீப் - 2 விக்கெட்டுகள்; ஷமி - 1 விக்கெட்)


மேலும் படிக்க |  IND vs SA : 28 ரன்கள் போதும்... விராட் கோலி செய்யப்போகும் சாதனை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ