நடைப்பெற்று வரும் ஆண்கள் டி-20 உலகக் கோப்பை 2019 தகுதி போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர்களான அஷ்பக் அகமது மற்றும் குலாம் ஷாபர் மாற்று ஏற்பாட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒப்புதல் அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"ICC ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2019 தகுதி போட்டியின் தொழில்நுட்பக் குழு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர்களான அஷ்பக் அகமது மற்றும் குலாம் ஷாபர் மாற்று ஏற்பாடு குறித்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது" என்று ICC செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


தற்போதைய ஊழல் விசாரணை தொடர்பாக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்ட அஷ்பக்கிற்கு மாற்றாக இடது கை தொடக்க ஆட்டக்காரர் பைசான் ஆசிப் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் அழைக்கப்பட்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் நடந்த கடைசி ICC ஆண்கள் டி20 உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் ஆசிப் விளையாடியது குறிப்பிடத்தக்கது.


19 வயதுக்குட்பட்ட அணியின் உறுப்பினரான கீப்பர்-பேட்ஸ்மேன் விருத்யா அரவிந்த், குலாம் ஷாபருக்கு மாற்று வீரராக களமிறங்கவுள்ளார். 


ஒரு வீரரை மாற்றுவதற்கு மாற்று தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதல் தேவைப்படுகிறது என்பதைக் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இந்நிலையில்., ICC ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2019 தகுதி போட்டிகளின் நிகழ்வு தொழில்நுட்பக் குழுவில் ICC தலைவர் ஜெஃப் அலார்டிஸ், ICC பிரதிநிதி கிறிஸ் டெட்லி, புரவலன் பிரதிநிதி மஜர் கான், போட்டி இயக்குனர் மாரூஃப் ஃபஜந்தர், நடாலி ஜெர்மானோஸ் மற்றும் டிர்க் நானெஸ் (இருவரும் சுயாதீன வேட்பாளர்கள்) ஆகியோர் அஷ்பக் அகமது மற்றும் குலாம் ஷாபர் ஆகியோரது மாற்று வீரர்கள் குறித்து அறிவுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.