உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஏற்கனவே கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன் இந்தியா மோதுகிறது  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆட்டம் இன்று காலை மவுண்ட் மவுங்கனுயி நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸும்பா 36 ரன்கள் எடுத்தார். 


இந்திய அணி வெற்றி பெற 154 ரன்கள் தேவை என்ற நிலையில், தனது பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்கள் ஷுப்மன் மற்றும் தேசாய் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி 21.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஷுப்மன் கில் 90 ரன்களுடன், தேசாய் 56 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


59 பந்தில் 90 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்த ஷுப்மன் கில் ஆட்ட நாயகனாக தேர்ந்தேடுக்கப்பட்டார்.