16:45 21-02-2020
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 19.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 115 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன்மூலம் இந்திய பெண்கள் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி-20 உலகக் கோப்பை தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி.


 



 



16:38 21-02-2020
#INDvAUS  ஐசிசி மகளிர் #T20WorldCup முதல் வெற்றியை பதிவு செய்த பெண்கள் இந்திய அணி.



16:13 21-02-2020
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெண்கள் இந்திய அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 15 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. 


பெண்கள் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 30 பந்துகளில் 42 ரன்கள் தேவை.



சிட்னி: 7 வது ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கியது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உலகக் கோப்பை பட்டத்தை மிக அதிகமுறை வென்றுள்ளது. அதாவது 2010, 2012, 2014 மற்றும் 2018 என 4 முறை உலக சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது. இன்று தனது முதல் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. ஆனால் இந்தியா இதுவரை ஒருமுறைக்கூட பெண்கள் டி 20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றதில்லை. 


இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மெக் லானிங் இந்தியாவுக்கு எதிராக முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். 


 



இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட மொத்தம் 10 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. தாய்லாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணி முதல் முறையாக டி 20 உலகக் கோப்பையில் விளையாடுகிறது. இந்த அணியும், பங்களாதேஷ் அணியும் தகுதிப் போட்டியின் மூலம் உலகக் கோப்பை தொடருக்குள் நுழைந்தனர். 


 



ஹர்மன்பிரீத் கவுரின் தலைமையில் விளையாடும் இந்திய அணி மிகவும் இளமையானது. அவரது வீரர்களின் சராசரி வயது 23 ஆண்டுகள். அவருக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷெபாலி வர்மா, ரிச்சா கோஷ் மற்றும் ராதா யாதவ் போன்ற வீரர்கள் உள்ளனர். அவர்கள் 19 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.