இங்கிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 18-வது லீக் போட்டியில் இந்திய அணி மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்த அனைத்து போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதாவது இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் வெற்றியை உறுதி செய்யும் உத்வேகத்தில் இருக்கிறது.


உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவே வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இன்றைய ஆட்டம், இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.