ஐசிசி மகளிர் உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
![ஐசிசி மகளிர் உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா ஐசிசி மகளிர் உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/07/16/116999-609666-mithali-raj-pti-95.jpg?itok=KttfxZXK)
பெண்களுக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொண்டது.
நியூசிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா சிறப்பான ஆட்டத்தால் 50 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது.
பின்னர் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து வீராங்கனைகள் களம் இறங்கினார்கள்.
நியூசிலாந்து வீராங்கனைகளை 25.3 ஓவருக்குள் ஆல்அவுட்டாக்கிய இந்தியா, 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.