ஐசிசி மகளிர் உலக கோப்பை: 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் நேற்று நடைப்பெற்ற 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின.
எட்டு அணிகள் மோதும் மகளிர் உலகக் கோப்பைத் தொடர், இங்கிலாந்து நாட்டில் நடந்துவருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில் இலங்கை அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களை குவித்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 78 (110) ரன்களும், கேப்டன் மித்தாலி ராஜ் 53 (78) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இலங்கை வீராங்கணை ஸ்ரீபாலி வீரக்கொடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணி 50 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.