கிரிக்கெட் செய்திகள்: டெஸ்ட் மேட்ச் டிரா அல்லது டை ஆனால் யார் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வார்கள்? என்ற விவாதம் சில நாட்களாக நிலவி வருகிறது. அதற்கு விரைவில் விடை கிடைக்கும் எனத்தெரிகிறது. கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய போட்டியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship Match) இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. ஒருவேளை இந்த போட்டி டிரா அல்லது டை ஆனால், எந்த அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் படத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விராட் கோலி (Virat Kohli) தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறவுள்ளது. ஆனால் டெஸ்ட் மேட்ச் டிரா அல்லது டை என்ற முடிவுக்கு வரும் நிலையில் யார் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வார்கள்? என்ற விவாதத்துக்கு ஐ.சி.சி (ICC) இன்னும் விளக்கவில்லை


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் (IND vs NZ, WTC 2021) டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த போட்டிக்கு முன்பே தங்கள் அணிகளை தயார் செய்யும் பணியில் இரண்டு கேப்டன்களும் இறங்கியுள்ளனர். 


ALSO READ |  World Test Championship-க்கு முன்னர் லுக்கை மாற்றிய ரவீந்திர ஜடேஜா: போட்டோ வைரல்


இதைக் கருத்தில் கொண்டு, நியூசிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் (ICC Test Championsh 2021) போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடுவதன் மூலம் தங்கள் தயார் படுத்த விரும்புகிறது. அதே நேரத்தில், இந்திய அணியும் ஜூன் 2 ஆம் தேதி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்லவுள்ளது. அந்நாட்டு அணிக்கெதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.


இப்பொழுது கேள்வி என்னவென்றால், சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கும் இந்த போட்டியின் டிரா அல்லது டை என்னவாகும்? ஆட்டத்தின் போது  மழை பெய்தால் என்ன நடக்கும்? போன்ற கேள்விகளுக்கான விடை இன்னும் கிடைக்கவில்லை. ஒருவேளை போட்டி வெற்றி தோல்வி முடிவு எட்டாமல் முடிந்தால், யார் வெற்றியாளராக கருதப்படுவார்கள் என்பது குறித்து இதுவரை இரண்டு அணிக்கும் தெரியாது. 


இரு அணிகளுக்கான இடையில் நடைபெறும் போட்டி டிரா அல்லது டை மற்றும் ஆட்டம் தொடங்கப்படாமல் மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டால் என்ன முடிவு எடுக்கப்படும் என்று வரும் நாட்களில் ஐ.சி.சி தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.


ALSO READ |  Ind vs NZ WTC Final: இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் சவால் நிறைந்தது! கேன் வில்லியம்சன்


ஐ.சி.சி நடத்தி வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் இரண்டு இடங்களை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பிடித்துள்ளன. இந்த இரண்டு அணிகளில் யார் சாம்பியன் என்பதை முடிவு செய்ய, இரு அணிகளுக்கும் இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18 ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஆனால் இப்போது இருந்தே இந்த போட்டி மீதான எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR