வரும் மார்ச் மாதம் 23-ஆம் தேதி முதல் IPL 2019-க்கான போட்டிகள் தொடங்குகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL தொடர்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு முதல் விளையாடி வருபவர் தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர். இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் போல் இவரும் அவ்வபோது தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றார்.


அந்த வகையில் நேற்று அவர் செய்திருந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 



IPL 2019 தொடருக்கான முதல் 2 வாரத்திற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியானது. இதனைதொடர்ந்து இம்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பதிவினை பதிவிட்டுள்ளார்.


தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது... "என் இனிய தமிழ் மக்களே நலமா? மார்ச் 23-ஆம் தேதி நமது கோட்டையில் களம் இறங்குகிறோம். வந்தோம் வென்றோம் சென்றோம். வருவோம் வெல்வோம் செல்வோம். இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க. கொல காண்டுல வாரோம். செண்டிமெண்ட் இருக்குறவன் குறுக்க வராதீங்க. எடுடா வண்டிய போடுடா விசில" என பதிவிட்டுள்ளார்.


இம்ரான் ட்விட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்... "நலம் நலம் அறிய ஆவல். ஆசையாய் வளர்க்கும் சிங்கக்குட்டி எப்படி இருக்கிறது. தெற்கு ஆப்பரிக்காவில் நல்ல மழை பெய்கிறதா? வீட்டில் அனைவரையும் கேட்டதாக கூறவும். தம்பி நிகிடி சவுக்கியமா? வரும் போது மறவாமல் சீமை ரொட்டியும் மிட்டாயும் வாங்கி வரவும்" என்று பதிவிட்டுள்ளனர். 


இந்த ட்வீட்டுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது