இந்தியச் சமூகத்தில் பெண் தெய்வங்களின் பங்கு மகத்தானது. ஆனால், வாழ்வியலில் ஆணாதிக்கச் சமூகத்தின் கீழாகவே பெண்கள் இருந்து வருகின்றனர். ஆண் கடவுள்களுக்கு நிகராக பெண் தெய்வங்கள் இருந்தாலும், பெருந்தெய்வங்களாகவும், மெயின்ஸ்டிரீம் தளத்தில் அறியப்படக்கூடிய பெண் தெய்வங்கள் குறைவுதான். இப்படிப்பட்ட சமூகத்தில் இந்தியாவில் உருவான செஸ் விளையாட்டுப் போட்டியில் ராஜாவைவிட அதிக சக்தி வாய்ந்ததாக ராணி இருப்பது ஆச்சரியமளிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்தியச் சதுரங்கப் போட்டி, இந்திய போர் முறையில் இருந்து உருவாகியிருக்கிறது. அதாவது, பாரசீகர்களும், முகலாயர்களும், ஆப்கன்களும் அஞ்சிய யானைப் படை, காலாட் படை, சிப்பாய் வீரர்கள், மந்திரி மற்றும் முதன்மை ஆலோசகர்கள் கொண்ட போர் முறை. இதில் ராணிக்கு பெரும் பங்கு இல்லை. அப்படியென்றால் இந்தியாவில் ராணியே இல்லையா என்கிறீர்களா ?.


மேலும் படிக்க | மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் திணறடித்த ஆர் பிரஞ்ஞானந்தா!


ஜான்சி ராணி, ருத்ரமா தேவி, வேலு நாச்சியார் போன்றவர்கள் எல்லாம் சமீப காலங்களில் உருவாகி வந்த ராணிகள். 6ம் நூற்றாண்டு காலத்தில் ராணிகள் இருந்திருக்கலாம் அல்லது இல்லாமலும் போயிருக்கலாம். ஆனால், விரல்விட்டு எண்ணும் அளவுக்குத்தான் ராணிகள் இருந்திருக்கிறார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.   


கொஞ்சம் 5ம் நூற்றாண்டு வரை நாம் செல்ல வேண்டியிருக்கிறது.  



கிட்டத்தட்ட, 5ம் நூற்றாண்டு வாக்கில்தான் இந்தியாவில் சதுரங்கம் உருவாகி விளையாடியிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சதுரங்கா, வல்லாட்டம் என செஸ் போட்டிக்கு அப்போது சில பெயர்களும் இருந்திருக்கிறது. செஸ் உருவானது என்னமோ இந்தியாவில்தான் என்றாலும், கிட்டத்தட்ட அப்போது மக்கள் விளையாடிய செஸ் போட்டியில் ‘ராணி’ என்ற காயே இல்லை. ராணி இல்லாமலேயே சுமார் 400க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்தியாவில் செஸ் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். 


அப்போ, ராணிக்குப் பதிலாக எந்தக் காயை வைத்து விளையாடினார்கள் ?. ராஜாவுக்குப் பக்கத்தில் Viezer எனப்படும் அரசு ஆலோசகர் என்ற காய் இருந்திருக்கிறது. இந்த ஆலோசகர் பதவி உண்மையில் அப்போது இந்தியச் சமூகத்தில் உள்ள மன்னர்களுக்கு உண்டு. பெரு மன்னர்கள் முதல் குறுநில மன்னர்கள் வரை முதன்மை ஆலோசகர்கள் இருந்தார்கள். அவர்களின் ஆலோசனைப்படிதான் ராஜா செயல்படுவார். 



எந்த விவகாரமென்றாலும் ஆலோசகரைக் கேட்டுத்தான் அனைவரும் செய்ய வேண்டும். கிட்டத்தட்ட ராணிக்குப் பதில் இந்தியாவில் இந்த ஆலோசகர்தான் இருந்திருக்கிறார். செஸ் போர்டிலும் ராணி என்ற காய்க்குப் பதில் முதன்மை ஆலோசகர்தான் இருந்திருக்கிறார். அவருக்கு செஸ் ஆட்டத்தில் ஒரு அடி மட்டுமே நகரும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மந்திரி செல்லும் குறுக்கு வெட்டில் ஒரு அடி மட்டும் முன்னே, பின்னே முதன்மை ஆலோசகர் நகரலாம். ராஜாவை பாதுகாப்பதே முதன்மை ஆலோசகரின் பணியாக நிஜத்திலும், செஸ் ஆட்டத்திலும் இருந்து வந்தது. 


பின்னர், நம்மிடம் இருந்து செஸ் ஆட்டம் பெர்சியா, ஆப்கன், அரேபியா, ஐரோப்பா, ரஷ்யா, ப்ரான்ஸ் என உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்த பெர்சியா மூலம் தான் முதலில் தொடங்கி, அங்கிருந்து அப்படியே பல நாடுகளுக்கு செஸ் பரவியிருக்கிறது. ‘செஸ்’ என்ற இந்த சொல்கூட பெர்சியாவில் இருந்து உருவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. 



ஏனெனில், பெர்சிய நாட்டினர் இந்தப் போட்டியை ‘Shah’ என்று அழைத்தனர். அப்படியென்றால் மன்னர் என்று அர்த்தமாம். அந்தச் சொல் நாளடைவில் மருவி, ‘Chess’ என உருமாறியிருக்கிறது. பெர்சிய மொழியில் ‘Shah Mat’ என்றால் மன்னரைக் காப்பாற்ற முடியவில்லை என்று அர்த்தம். அந்தச் சொற்றொடர்தான் இன்று உலக மக்களால் அழைக்கப்படும் ‘Check Mate’!.


மேலும் படிக்க | செஸ் ஒலிம்பியாட் - குரல் கொடுத்த ஆண்டவர் கமல் பூரித்துப்போன அரங்கம்


எனவே, இந்தியாவில் இருந்து போன செஸ் வடிவ முறை அந்தந்த நாடுகளுக்கு ஏற்றாற்போல மாறின. அந்தந்த நாடுகளின் பாரம்பரம், கலாச்சார முறைக்கு ஏற்ப செஸ் ஆட்டத்தின் விதிமுறைகளும், அதிகாரங்களும் மாறின. 


ஆனாலும், செஸ் ஆட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழவில்லை. செஸ் வடிவ முறையை கொஞ்சம் மட்டும்தான் மாற்றி மாற்றி ஆடியிருக்கிறார்கள். ஆனால், ஐரோப்பாவுக்குள் எப்போது செஸ் சென்றதோ, அதன் அடித்தளத்தையே மாற்றிவிட்டார்கள்.


 ‘அதென்ன ராஜாவுக்குப் பக்கத்தில் சம்மந்தம் இல்லாத Viezer எனப்படும் முதன்மை ஆலோசகர். எதற்கு அது?. அந்தப் பதவியை அடியோடு தூக்குங்கள்’ என்று கூறியதோடு ராணி என்ற புதிய பதவியை ஐரோப்பியர்கள் உருவாக்கினார்கள். செஸ் வடிவ முறையிவில் கொண்டுவரப்பட்ட பெரும் மாற்றம் ஐரோப்பியர்களிடத்தில் இருந்தே தோன்றியிருக்கிறது. Viezer எனப்படும் முதன்மை ஆலோசருக்கு, ராணி என்ற புதிய பதவியை உருவாக்கியதன் மூலம் உலக அரசியல் வடிவில் ஐரோப்பா வைத்த ‘செக்-மேட்’ அது.!.



இதற்கு சில நியாயமான காரணங்களை வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். என்ன அது?


ஆல்ரெடி ஃப்ளாஷ்பேக்கில்தான் இருக்கிறோம். எனவே, ஃப்ளாஷ்பேக்கிற்குள் ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்.! 


செஸ் விளையாட்டு ஐரோப்பியாவுக்குள் வந்த காலகட்டத்தில் பெரும்பாலும் ஐரோப்பியாவில் மன்னர்களைவிட ராணிகளே அதிகம் ஆண்டுகொண்டிருந்தனர். சொல்லப்போனால், ஐரோப்பாவில் மன்னர்களைக் காட்டிலும் ராணிகளுக்கே செல்வாக்கு அதிகம். அந்த நாடுகளின் பண்பாடு அது. 


கொஞ்சம் தூக்கலாகச் சொன்னால், ஐரோப்பாவில் ராணி தான் ராஜாவிற்கு அடுத்து. இந்தியாவில் ஆண் வாரிசு பிறக்கும்வரை ராஜா காத்துக்கொண்டிருப்பார். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இல்லையெனில் அடுத்த தலைமுறைப் பதவிகளும் ஆண்களையே சென்றுசேரும். ஆனால், ஐரோப்பாவில் அப்படியில்லை. ஆண் வாரிசு இல்லாமல் ராஜா உயிரிழந்துவிட்டால், அவரது மகள் ராணி ஆவார். மகளின் கணவர் வெறும் இளவரசர் மட்டுமே. ராஜா கிடையாது. இப்போது இங்கிலாந்து ராணி எலிசபெத் ராணியின் கணவர் பிலிப், அங்கு இளவரசர் மட்டும்தான். ராஜா அல்ல.!



இதுமாதிரியான சூழலில், ஐரோப்பியாவில் ராணி இல்லாத செஸ் போர்டை ஏற்றுக்கொள்வார்களா ?!. எனவே ராணி என்ற புதிய பதவியை உருவாக்கினார்கள். ஆனால், அதிகாரம் என்னமோ Viezer எனப்படும் முதன்மை ஆலோசகரின் அதே அதிகாரம்தான் வழங்கப்பட்டது. Diagnol-ஆக ஒரு கட்டம் மட்டுமே ராணியால் நகர முடியும். இப்படியே போய்க்கொண்டிருந்த செஸ் ஆட்டம், 15ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினை ஆண்ட Isabella of Castile காலத்தில் தான் ராணி தனது எல்லையற்ற அதிகாரத்தைப் பெற்றது. 


Isabella of Castile என்ற ராணியின் காலகட்டத்தில் நடந்த மாற்றங்கள் உலகம் அறிந்தவை. ஸ்பெயினை விரித்து உலகை ஆளும் அவரது கனவுக்கு நடந்த விளைவுகள் பெரும் வரலாறுப் பக்கங்கள். இவரது ஆட்சியில் தான் Christopher Columbus அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.



இன்னும் எத்தனையோ மாற்றங்கள் இவரது காலத்திலேயே நடந்தன. இவரது ஆட்சியின் போதுதான் ஸ்பெயினுக்குள் செஸ் ஆட்டம் வருகிறது. இருப்பதிலேயே உச்சப்பட்ச அதிகாரம் ராணிக்கு வழங்கப்படுகிறது. 


மேலும் படிக்க | செஸ் ஒலிம்பியாட் போஸ்டர் தமிழர்களுக்கான அவமானம் - கொந்தளித்த சீமான்


செஸ் ஆட்டத்தில் எல்லையில்லா அதிகாரம் ராணி பெற்றது Isabella of Castile காலக்கட்டத்தில்தான். உருவாக்கப்பட்ட ராணியை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த இயேசு கிறிஸ்துவின் தாயான மேரி மாதாவை அந்த இடத்தில் பொருத்தினார்கள் ஐரோப்பியர்கள்.  ஆனாலும் ஒரு சில நாடுகளில்இப்போதும் ராணிக்குத் தடைதான். குறிப்பாக, அரேபிய நாடுகளில் இப்போதுவரை ராணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரேபியர்களின் செஸ் ஆட்டத்தில் ராணி என்ற காயே இல்லை. ராணிக்குப் பதில் அரசு ஆலோசகர்தான் இருப்பார். ராணியை வைத்து செஸ் ஆடுவதற்கு அந்நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சரி, விஷயத்துக்கு வருவோம். 



இதன்பிறகு, ஐரோப்பாவில் இருந்து மேலும் வெவ்வேறு நாடுகளில் பரவிய செஸ் ஆட்டம், மீண்டும் இதே வடிவ முறையோடு இந்தியாவுக்குள் வருகிறது. Again Re-entry To இந்தியா! . இங்கிருந்து வேறு வடிவத்தில் வெளியே போன விளையாட்டு வரலாற்றின் பக்கங்களில் சுழன்று புதுவடிவில் மீண்டும் ஒருவழியாக இந்தியாவுக்கே வந்து சேர்ந்தது. இப்போது இந்தியாவில் நாம் விளையாடும் செஸ் ஆட்டத்தில் ராணிக்கே உச்சப்பட்ச அதிகாரம்!. 



ஆட்டத்தில் ராணியை இழந்துவிட்டால் அவ்வளவுதான் என்னும் பதட்டம் பலருக்கும் உண்டு. ராஜாவைத் தொட வேண்டும் என்றால் நீங்கள் பலம் வாய்ந்த ராணியைத் தாண்ட வேண்டும். ராணியை அவ்வளவு சீக்கிரத்தில் தாண்டிவிட முடியுமா என்ன ?!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ