அமெரிக்காவில் போட்டிகள் நடத்த வேண்டும்: தோனி
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் அங்குள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் மைதானத்தில் இரண்டு 20 ஓவர் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெற்றது.
இந்த நிலையில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி திரில் வெற்றி பெற்றது. 2-வது 20 ஓவர் போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 2 ஓவர்களில் 15 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது ஆட்டம் ரத்தனாதால் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்றது.
இந்த போட்டிக்கு பேசிய தோனி கூறுகையில்:- மீண்டும் வந்து விளையாடியக்கூடிய இடங்களில் இதுவும் ஒன்று. துவக்கத்தில் இங்கு 20 ஓவர் போட்டிகள் விளையாடுவது சிறப்பானதாக இருக்கும். மைதானங்கள் நன்றாக உள்ளது. இங்கு ரசிகர்கள் ஏராளமானோர் வருகை தருகிறார்கள். ஒளிபரப்பு செய்வதற்க்குகான நேரமும் சரியாக பொருந்தியிருக்கிறது. அனைத்து தரப்பிலும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்க்கு அமரிக்கா சிறந்த இடமாகும் என தெரிவித்தார்
இந்திய அணி பற்றி கூறும் போது:- பந்து வீச்சாளர்கள் தங்கள் பங்களிப்பை சரியாக செயல்படுத்தினார்கள். 150 என்பது எட்டக்கூடிய இலக்காகும். மிஸ்ரா சிறப்பாக பந்து வீசினார் எனவும் கூறினார்.