புனேவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று தெரிவித்தார். அதன் படி இந்திய அணி முதலில் பந்து வீச உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் இந்தத் தொடர், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே இதுவரை நடந்துள்ள 90 டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலியா 40 வெற்றிகளையும், இந்தியா 24 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 25 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இன்றைய போட்டி விருவிருப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.