3_வது டெஸ்ட்: உணவு இடைவேளை வரை ஆஸ்., 83/4 ரன்கள்
உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய ஆஸ்திரேலியா-வின் 3-வது டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 451 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 178 ரன் விளாசினார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் புஜாரா 202 ரன்களும் சஹா 117 ரன்களும் ,முரளி விஜய் 87 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து 152 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2–வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், மேத்யூ ரென்ஷாவும் களம் இறங்கினர். வார்னருக்கு (14 ரன்) எடுத்த நிலையில் ஜடேஜாவின் சுழலில் சிக்கி போல்டு ஆனார். அடுத்து வந்த நாதன் லயனும் (2 ரன்) ஜடேஜாவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அத்துடன் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 129 ரன்கள் எடுத்தாக வேண்டும்.
கடைசி மற்றும் 5வது நாளான இன்று 2 விக்கெட்டுக்கு 23 ரன்களுடன் தனது ஆட்டத்தை தொடர்ந்தது ஆஸ்திரேலியா அணி. ரென்ஷா 15 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்த ஓவரில் கேப்டன் ஸ்டீவன் சுமித் 21 ரன்கள் இருந்த நிலையில் ஜடேஜாவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். தற்போது ஷான் மார்ஷ்(15), பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப்(4) விளையாடி வருகின்றனர்.
உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.