பெங்களூரு: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


இந்நிலையில் இரண்டாவது டெஸ்டில் இந்தியா 71.0 ஓவர்கள் முடிவில் இந்திய அணி  8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் லியோன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


பின்னர் இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. வடே 25 ரன்னுடனும், ஸ்டார்க் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


தற்போது வரை ஆஸ்திரேலியா 48 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கைவசம் நான்கு விக்கெட்டுக்கள் உள்ளன. 


இந்நிலையில் மூன்றாவது நாளன இன்று ஆஸ்திரேலியா அணியில் ஆட்டம் தொடங்கியது. இந்த அணி 100 ரன்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றால் இந்த டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.