IND vs AUS : இந்தியா வச்ச டிவிஸ்ட்.. ஆஸி ஏமாற்றம் - அஸ்வின், ஜடேஜா நீக்கம் பின்னணி
IND vs AUS First Test | ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில் மிகப்பெரிய டிவிஸ்ட் வைத்தது. அஸ்வின், ஜடேஜா நீக்கிவிட்டு, வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். ஏன் தெரியுமா?
IND vs AUS First Test Latest Update | இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் தொடங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, பேட்டிங் செய்வதாக அறிவித்தார். பிளேயிங் லெவனைப் பொறுத்தவரை ஆச்சரியப்படும் விதமாக ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்படாமல் வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டனர். நிதீஷ் குமாருக்கு இது முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும். வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டதில் தான் பெரிய டிவிஸ்டே இருக்கிறது. அது என்ன என்பதை பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய அணியின் எதிர்பார்ப்பு
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படுவார் என்று தான் ஆஸி அணி எதிர்பார்த்தது. ஏனென்றால் ஆஸ்திரேலிய அணியில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அவர்களுக்கு எதிராக அஸ்வின் எப்போதும் சிறப்பாக செயல்படுவதைப் பொறுத்து இந்திய அணி அவரை சேர்க்கும் என நினைத்தது. ஆனால், சர்பிரைஸாக அஸ்வினை இந்திய அணி பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை. ஏனென்றால், அஸ்வினை நிறைய முறை ஆஸி அணியினர் ஆடிவிட்டனர். மறுபுறம் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அற்புதமாக பந்துவீசினார். இப்போது பார்மில் இருக்கிறார். உயரமாக இருப்பதால் வேகப் பந்துவீச்சுக்கு உகந்த மைதானத்தில் அவர் சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதனை ஆஸி அணி எதிர்பார்க்கவில்லை.
இந்திய அணியின் பிளேயிங் லெவன்
கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ்.
இந்திய அணி பிளான்
இந்த லெவனில் பல இளம் பிளேயர்கள் உள்ளனர். ஜெய்ஷ்வால், படிக்கல், துருவ் ஜூரல், நிதீஷ் ரெட்டி, ஹர்ஷித் ராணா ஆகியோர் முதன்முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடுகிறார்கள். அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஆடுகிறார்கள். துருவ் ஜூரல், இந்திய ஏ அணியில் இடம்பிடித்து சிறப்பாக ஆடினார். அதனால் அவரை அணியில் சேர்த்திருக்கிறது இந்திய அணி. நிதீஷ் ரெட்டி ஆல்ரவுண்டர். ஜெய்ஷ்வால் அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார். இதனால் இவர்களை வைத்து ஆஸியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
ஜெய்ஷ்வால் டக்அவுட்
ஆனால், எதிர்பார்த்தைபோல் ஜெய்ஷ்வால் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆடவில்லை. கேஎல் ராகுலுடன் ஓப்பனிங் இறங்கிய அவர் டக்அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களத்துக்கு வந்த தேவ்தத் படிக்கல் 23 பந்துகள் ஆடி ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டானார். இதனால் இந்திய அணி 14 ரன்களுக்குள்ளாக 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ