Border Gavaskar Trophy: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரையும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் விளையாட  உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிப்ரவரி, மார்ச் முழுவதும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் நடைபெற இருப்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. முதல் போட்டி நாக்பூரில் வரும் பிப். 9ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மைதானத்திற்கு வெளியேவும் மூத்த வீரர்களுக்கு இடையில் தற்போது சூடுபறக்கும் விவாதங்கள் நடந்து வருகிறது.


2020-2021ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் கைப்பற்றிய பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்க இந்திய அணியும், சொந்த மண்ணில் தங்களை வீழ்த்திய இந்திய அணியை, அவர்களின் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆஸ்திரேலியாவும் உள்ளது. இந்தியாவில் சுழற்பந்துவீச்சு டெஸ்ட் போட்டிகளில் முக்கியமான ஒன்று என்பதால், ஆஸ்திரேலியா அதனை சமாளிக்க தீவிர வலைப்பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. 


இந்தியாவுக்கு சுழற்பந்து என்றால் ஆஸ்திரேலியாவுக்கு உலகத்தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்களின் வேகமும், ஸ்விங்கும், தாக்குதல் பாணி பவுன்சர்களும் பலரையும் நிலைத்தடுமாற செய்யும். அந்த வகையில், இந்த தொடரில் இந்தியாவை அச்சுறுத்த காத்திருக்கும் ஆஸி., வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்து இங்கு காண்போம். 


பாட் கம்மின்ஸ்


ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ்தான், பாஸ்ட் பவுலிங் லைன்-அப்பை வழிநடந்துபவர். அவரின் வேகமமும். சீற்றமும் அச்சுறுத்த தக்கவை. மேலும், சுருதி சுத்தமாக துல்லியமான லென்த்தில் தொடர்ந்து பந்துவீசக்கூடியவர்.  எந்த சூழலையும் எதிர்கொள்ள தயங்காதவர், அவரை எதிர்கொள்வதுதான் சற்று கடினம். கம்மின்ஸின் பலம் என்னவென்றால், அவர் நீண்ட ஸ்பெல்களையும் நல்ல வேகத்திலும் வீசக்கூடியவர். அவர் வெவ்வேறு ரிலீஸிங் பாய்ண்டை பயன்படுத்தி ஒரு பகுதியில் பிட்ச் செய்கிறார், இது பேட்டர்களுக்கு லைனை கணிக்க கடினமாக்கும்.


ஜோஷ் ஹேசில்வுட்


ஜோஷ் ஹேசில்வுட் ஆஸ்திரேலிய பந்துவீச்சு பிரிவில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அவர் ரன்களை கசியவிடமால் ஓவரை கட்டுக்கோப்புடன் வீசுவதில் வல்லவர். எந்த பேட்டரையும் சுதந்திரமாக ஸ்கோர் செய்ய விடமாட்டார். ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோரை 'வேகமான' மெக்ராத் வெர்ஷன் எனலாம். மெக்ராத் எப்படி துல்லியமாக பந்துவீசக்கூடியவரோ, இவர்களும் அப்படிதான். ஆனால், கூடுதல் வேகத்துடன் வீசக்கூடியவர்கள். அவர்களின் உயரம் மற்றும் வலுவான உடலமைப்பின் காரணமாக, அவர்கள் பந்தில் கூடுதல் பவுன்ஸும் கிடைக்கிறது. இது குறிப்பாக ஃப்ரண்ட் ஃபுட்டில் விளையாடும் ஒரு பேட்டருக்கு மிக அச்சுறுத்தலாக இருக்கும். பார்ட்னர்ஷிப்பை உடைப்பது ஹேசில்வுட்டிற்கு கை வந்த கலை. ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இவர் துருப்புச் சீட்டாக இருப்பார்.


மிட்செல் ஸ்டார்க்


மிட்செல் ஸ்டார்க் என்றாலே முதல் பந்தில் இருந்து தாக்குதலை தொடங்குபவர் என்றுதான் அனைவரின் நியாபகத்திற்கும் வரும். ஓப்பனிங் பேட்டர்களை விரைவாக பெவிலியனுக்கு அனுப்பவது இவரின் தலையாய வேலை. கடந்த ஆஷஸ் தொடரிலும், 2020-21இல் இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் இதை கசித்தமாக செய்துள்ளார். காற்றில் பந்தை சுவிங் செய்வது அவருக்கு மிகவும் பிடித்ததில் ஒன்று. ஆட்டத்தின் தொடக்க ஸ்பெல்லின்போதே, ஸ்டம்புகளின் அடிபாகத்திற்கு குறிபார்த்து வீச தொடங்குவார். அவர் அதை சரியாக வீசத்தொடங்கிவிட்டார் எனில், எதிரில் இருப்பவர்கள் நிலை அதோகதிதான். இவரால் இரண்டு பக்கமும் ஸ்விங் செய்ய முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். துரதிருஷ்டவசமாக ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, அவர் விரல் காயத்தில் இருந்து மீண்டு வருவதால், நாக்பூரில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு அவர் கிடைக்காமல் போகலாம். ஆனால் அவர் அணிக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | 'தோனிக்காக தான்...' ஒரே நாளில் ஓய்வு - முதல்முறையாக மனந்திறந்த ரெய்னா


கேமரூன் கிரீன்


கேமரூன் கிரீன் தற்போது உலக கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்குகிறார். ஆனால் ஸ்டார்க்கைப் போலவே, அவரும் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். பட்டியலில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களையும் விட கிரீன் குறைவான வேகத்தைக் கொண்டுள்ளார். ஆனால் வேகப்பந்து வீச்சாளராக அவரது முதிர்ச்சியே அவரது சிறப்புகளில் ஒன்று. கடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரிலும், அவர் விக்கெட் எடுக்கவில்லை. ஆனால் அவர் விக்கெட்டுகளை எடுக்க பல சந்தர்ப்பங்களில் முயன்றார். பேட்டர்களை தொடர்ந்து தொந்தரவு செய்தார். அவரது பலம் அவரது லைன், லென்த்தான் என்றாலும் அவரின் கூடுதல் வேகத்திறன் பேட்டர்களை ஆச்சரியப்படுத்தும். இதனால் அவருக்கு அவ்வப்போது பவுன்ஸ் பந்துகளும் கிடைக்கும். ஒரு கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தை இவர் பெற்றால் நிச்சயம் பந்துவீச்சில் ஜொலிப்பார் எனலாம்.


ஸ்காட் போலண்ட்


வெறும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்காட் போலண்ட் தனக்கென ஒரு பெயரை உருவாக்கி, முதல் முறையாக இங்கு விளையாடுவதற்காக இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார். 6 போட்டிகளில் போலண்ட் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஸ்டார்க், கிரீனுடன் முதல் டெஸ்டில் விளையாடாத நிலையில் இவருக்கு வாய்ப்பு உறுதியாகியுள்ளது. இந்தியா வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு ஆடுகளத்தை தயார் செய்யக்கூடாது. ஏனெனில் போலண்ட் இது போன்ற ஆடுகளங்களில் மிக மிக ஆபத்தானவர். அத்தகைய பிட்சில் கிட்டத்தட்ட யாராலும் அவரை சுலபமாக விளையாட முடியாத வகையில் வீசுவார். 32 வயதில் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய போலண்ட், ஆஷஸில் இங்கிலாந்து பேட்டிங் வரிசையை நிலைகுலையச் செய்தார். அவர் 7 விக்கெட்டுக்களை எடுத்து 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அவர் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கலாம், ஆனால் போலந்துக்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் அதிகம் உள்ளது.


மேலும் படிக்க | குங்குமம் வைக்க மறுப்பு... இரண்டு வீரர்களை மட்டும் குறிவைக்கும் நெட்டிசன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ