IND vs AUS 2nd Test: ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், பார்டர் - கவலாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதி வருகின்றன. தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்க உள்ளது. காலை 9. 30 மணியளவில் தொடங்கும் போட்டியை காண, அதிக டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 9ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் இந்திய அணி வென்று,  தொடரில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், அதே ஆதிக்கத்தை தொடர டெல்லி டெஸ்ட் போட்டியை மிக முக்கிய போட்டியாக இந்திய அணி கருதுகிறது. அதே நேரத்தில், இந்தியாவை வீழ்த்தியே ஆக வேண்டிய கட்டயாத்தில் ஆஸ்திரேலியாவும் இன்றே களம் இறங்க உள்ளன. எனவே, இந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. 


அதேபோலவே, இந்த போட்டியிலும் சாதனைகளுக்கும் பஞ்சமிருக்காது என்றே தோன்றுகிறது. காரணம், இந்திய வீரர்கள் சிலர், தங்களின் பெரும் மைல்கல்களை இந்த டெஸ்ட் போட்டியில் அடைய உள்ளனர். குறிப்பாக, இந்திய டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரரான புஜாரா, இன்று தனது 100ஆவது டெஸ்டில் களமிறங்குகிறார். இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சிலர் அடையப்போகும் மைல்கல்கள் குறித்து இங்கு காண்போம். 


ஜடேஜா 250*


முதல் டெஸ்டில் மாஸான கம்பேக்கை கொடுத்த ரவீந்திர ஜடேஜா, சுமார் 6 மாதங்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் விளையாடினார். முழுங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் குணமடைந்தார். காயத்தில் இருந்து மீண்டு பின், ரஞ்சி கோப்பை தொடரில் விளையாண்டு, ஜடேஜா தனது உடற்தகுதியை மீட்டெடுத்துக்கொண்டார். 


அதிலும் சிறப்பாக விளையாடிய அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரலியாவை அதிர வைத்தார். பேட்டிங்கிலும் அவர் அரைசதம் அடித்ததார். இன்று தொடங்கும் 2ஆவது டெஸ்டில் ஜடேஜா 250 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இந்த மைல்கல்லை எட்டுவதற்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது.



ரோகித் டன் டணா டென்!


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கேப்டன் ரோகித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது 120 ரன்கள், இந்தியா ஸ்கோர் போர்டை உயர்த்த உதவியது. அதேபோன்று, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ரோகித் சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது 9 டெஸ்ட் சதங்களை அடித்துள்ள ரோகித், ஒரே சதத்தை அடித்தால் அவரது 10ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்வார். 


மேலும் படிக்க | Virat Kholi: முன்கூட்டியே பயிற்சியை தொடங்கிய விராட் கோலி..! அந்த தவறு தான் காரணம்


விராட் வருவார்... சதம் அடிப்பார்...


டெல்லி டெஸ்டுக்கு ஒரு நாள் முன்னதாக கோஹ்லி நெட்ஸில் கடுமையாக பயிற்சி செய்தார், கடந்த சில போட்டிகளில் அவர் பலவீனமாக இருப்பது கண்டறியப்பட்டதால், சுழற்பந்து வீச்சாளர்களை பந்து வீசுமாறு பயிற்சியில் கேட்டுக் கொண்டார். டெல்லி அவரது சொந்த மைதானம், 2019ஆம் ஆண்டு நவம்பருக்கு பிறகு அவர் தனது முதல் டெஸ்ட் சதத்திற்கான காத்திருப்பை இங்கே முடிப்பார் என எதிர்பார்க்கப்பபடுகிறது. 


2019இல், கொல்கத்தாவில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிராக 136 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு கோஹ்லி, டெஸ்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. நாக்பூரில் ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அறிமுக வீரர் டோட் மர்பியிடம் லெக் ஸ்டம்ப் லைனுக்கு கீழே அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் அதைச் சரிசெய்து, மிகவும் கவனம் செலுத்தி, 3 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பில் உள்ள தனது டெஸ்ட் சதத்தைப் பெறுவார் என தெரிகிறது. 


லயானை மிஞ்சுவாரா அஸ்வின்?


உலக கிரிக்கெட்டில் தனது மிகப்பெரிய போட்டியாளரான நாதன் லயானை முறியடிக்கும் பொன்னான வாய்ப்பு அஸ்வினுக்கு தற்போது கிடைத்துள்ளது. அஸ்வின் 89 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 457 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 


லயோனை மிஞ்ச அவருக்கு இன்னும் ஐந்து விக்கெட்டுகள் மட்டுமே தேவை. ஆனால் லயான் டெல்லி டெஸ்ட் போட்டியிலும் விளையாடுவார் என்பதால், விக்கெட்டுகளின் தேவை அதிகரிக்கலாம். அஸ்வின் vs லியான், மினி போராக இருக்கும் என்பதால் இது நிச்சயம் அவர்களுக்கு மறக்க முடியாது போட்டியாக இருக்கும். 


புஜாரா 100*


போட்டிக்கு பின் ஆட்டநாயகன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் இந்த 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதன்மை நாயகன் புஜாராதான். அவர் இன்று 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளார்.



எனவே, பல ஆண்டுகளாக இந்திய பேட்டிங் வரிசையின் தூணாக விளங்கும் சேட்டேஷ்வர் புஜாரா மீது அனைவரின் பார்வையும் உள்ளது. புஜாரா தனது 100வது டெஸ்டில் டெல்லியில் விளையாடுகிறார். அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத போட்டியாக இருக்கும் இந்த போட்டியை காண, குடும்பத்தினர் ஏற்கனவே டெல்லி சென்றுள்ளனர்.


மேலும் படிக்க | அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நம்பர் 1 இடத்தை இழந்த இந்திய அணி! ஏன் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ