இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி டெல்லியில் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டி இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாராவுக்கு 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய சச்சின், கங்குலி, சேவாக் உள்ளிட்டோர் அடங்கிய எலைட் லிஸ்டில் இடம்பெறும் அவர், இந்த போட்டியில் பங்கேற்பதற்கு முன்பு தன்னுடைய கனவு என்ன என்பதை தெரிவித்துள்ளார்.
2வது டெஸ்ட் போட்டி
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனால் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது. இது புஜராவுக்கு 100வது சர்வதேச போட்டியாகும். இது குறித்து பேசிய அவர், இந்திய அணிக்காக 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவது என்பது தன் வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணம் என தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே தன்னுடைய கனவு என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | WPL 2023: கிரிக்கெட் ‘மெண்டர்’ ஆகும் டென்னிஸ் வீராங்கனை! மாத்தி யோசிக்கும் RCB
புஜாராவின் கனவு
இந்திய அணிக்காக 13 ஆண்டுகளாக விளையாடி வரும் புஜாரா, கடைசியாக 2014 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்தார். அதன்பிறகு அவருக்கு இந்திய அணியின் ஒருநாள் தொடருக்கான அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 20 ஓவர் போட்டியில் அவர் பெயர் பரிசீலிக்கப்படுவது கூட இல்லை. இதனால் அவர் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இந்திய அணியில் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு பார்ம் அவுட்டில் இருந்ததால், இலங்கை அணிக்கான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால் விரக்தியடைந்த அவர், உடனடியாக இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இந்தியாவில் அப்போது ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இருப்பினும் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அங்கு சிறப்பாக விளையாடினார். அதனால், அணியில் இருந்து நீக்கப்பட்ட புஜாரா மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டார்.
புஜாரா நம்பிக்கை
இது குறித்து அவர் பேசும்போது, " பார்ம் இல்லாத நேரம் நிச்சயம் சவாலானதாக இருந்தது. அதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் மன ரீதியாக வலுவாக இருக்க வேண்டும். உங்கள் மீதும் உங்கள் நம்பிக்கை மீதும் கவனம் செலுத்த வேண்டும். என்னுடைய விளையாட்டை மாற்ற முடியாது என எனக்கு தெரியும். அதேநேரத்தில் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு புதிய ஷாட்டுகளை சேர்த்துக் கொண்டேன். யாரும் அவர்களின் விளையாட்டை மாற்ற முடியாது. ஆனால் மேம்படுத்தலாம். சில விஷயங்களை சேர்க்கலாம். அதனை நன்றாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். இந்திய அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வெல்ல வேண்டும் என்பதே மிகப்பெரிய ஆசை" என தெரிவித்துள்ளார். 35 வயதாகும் புஜாரா 19 சதங்கள் உட்பட 7 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை அடித்துள்ளார்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2023 தொடருக்கு முன்பே சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! ரசிகர்கள் அதிர்ச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ