ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்த வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை!
Border-Gavaskar Trophy 2024: இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
Border-Gavaskar Trophy 2024: டி20 உலக கோப்பை 2024 தொடருக்கு பிறகு இந்திய அணியின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் தொடர் பார்டர்-கவாஸ்கர் டிராபி. இந்த ஆண்டு இறுதியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கௌதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதுவதால் இது மிகப்பெரிய தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பார்டர்-கவாஸ்கர் டிராபியை இந்திய அணி தன்வசம் வைத்துள்ளது. இதனை வெல்ல ஆஸ்திரேலியா அணி அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. இதனை ரோஹித் சர்மா தலைமையிலான அணி முறியடிக்க அதிக முயற்சிகளை மேற்கொள்ளும்.
மேலும் படிக்க | என்னை இந்திய அணியில் எடுங்கள் - தேர்வாளர்களுக்கு சவால் விட்ட தமிழக வீரர்!
பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணி
தற்போது டெஸ்ட் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக உள்ளனர். இதே ஜோடி ஆஸ்திரேலியா மண்ணிலும் தொடர அதிக வாய்ப்புள்ளது. மேலும் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார். ஷுப்மான் கில் மற்றும் விராட் கோலி 3 மற்றும் 4வது இடத்தில் களமிறங்குவார்கள். விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இருவரில் ஒருவர் இடம் பெற வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய சர்ஃபராஸ் கான் இடம் பெற கூடும். பேக்கப் விக்கெட் கீப்பராக துருவ் ஜூரல் இருப்பார். ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் இந்தியாவுக்கான முதல் தேர்வு சுழற்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள். குல்தீப் யாதவ் கூடுதல் ஸ்பின்னராக இடம் பெறுவார்.
வேகப்பந்து வீச்சாளர்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முகமது ஷமி அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக பிசிசிஐ அவரை தயார் படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் நிச்சயம் அணிக்கு திரும்புவார்கள். மேலும் ஒரு வித்தியாசமான தேர்வாக ஷர்துல் தாக்கூர் இடம் பெறலாம். ஏனெனில் இவரால் பேட்டிங்கிலும் கை கொடுக்க முடியும். இவர்களை தவிர டெஸ்ட் அணியில் வாய்ப்பிற்காக வாஷிங்டன் சுந்தர், ரஜத் பட்டிதார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, உம்ரான் மாலிக் ஆகியோரும் காத்து கொண்டுள்ளனர்.
பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024க்கான உத்ததேச இந்திய அணி
ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, சர்பராஸ் கான், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஷ்வின், துருவ் ஜூரல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ்
இந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் (பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25)
இந்தியா vs ஆஸ்திரேலியா, 1வது டெஸ்ட்: நவம்பர் 22-நவம்பர் 26, பெர்த்
இந்தியா vs ஆஸ்திரேலியா, 2வது டெஸ்ட்: டிசம்பர் 6-டிசம்பர் 10, அடிலெய்டு
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3வது டெஸ்ட்: டிசம்பர் 14-டிசம்பர் 18, பிரிஸ்பேன்
இந்தியா vs ஆஸ்திரேலியா, 4வது டெஸ்ட்: டிசம்பர் 26-டிசம்பர் 30, மெல்போர்ன்
இந்தியா vs ஆஸ்திரேலியா, 5வது டெஸ்ட்: ஜனவரி 3-ஜனவரி 7, சிட்னி
மேலும் படிக்க | பேட்டிங் பலவீனம் இதுதான்... சுட்டிகாட்டிய பயிற்சியாளர் - சரிசெய்யுமா இந்திய அணி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ