IND vs AUS: கேஎல் ராகுலுக்கு செக் வைத்த பிசிசிஐ! அணியில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

India vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு துணை கேப்டனாக இருந்த கேஎல் ராகுலை பிசிசிஐ நீக்கி உள்ளது.
India vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளுக்கான டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் பதவியில் இருந்து கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் குறைவான ரன் எடுத்ததைத் தொடர்ந்து அவரது இடம் தற்போது கேள்வி குறி ஆகி உள்ளது. ஆனால் அணியில் இருந்து நீக்காமல் தேர்வுக் குழு அவரைத் தக்க வைத்துக் கொண்டது. பார்டர்-கவாஸ்கர் டிராபியின் எஞ்சிய போட்டிகளுக்கு துணை கேப்டன் நியமிக்கப்படவில்லை. கே.எல்.ராகுலை கடந்த ஒரு வருடமாக டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்து வந்தார். 2022ல் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைமைத்துவக் குழுவின் ஒரு பகுதியாக முதன்முதலில் ஆன ராகுல், இலங்கைக்கு எதிரான தொடரைத் தொடங்கும் இந்திய அணியின் நிரந்தர துணை கேப்டனாக ஆனார்.
மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே விளையாடும் போட்டிகள்... முழு விவரம் - மார்க் பண்ணி வச்சுக்கோங்க!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலும், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அவர் அணியை வழிநடத்தினார். ஆனால் பேட்டிங்கில் குறைவான செயல்திறன்களைத் தொடர்ந்து அணியில் அவரது இடம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இதனால் அவர் மீது அழுத்தம் ஏற்பட்டது, தற்போது பிசிசிஐ ராகுலை அணியில் இருந்து நீக்கவில்லை, ஆனால் அவரை துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. ராகுல் தலைமைக் குழுவில் இடம்பிடித்ததில் இருந்து 7 டெஸ்ட் போட்டிகளில் 175 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவர் 2022ல் இருந்து ஒருமுறை மட்டுமே 50 ரன்களை கடந்துள்ளார். இலங்கைக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் தொடருக்கான கேப்டனாக ராகுல் நீக்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய தொடருக்கான ODI அணியிலும் அவர் இடம் பெற்றுள்ளார், ஆனால் ஹர்திக் பாண்டியா இப்போது ODI அணியின் துணை கேப்டனாக உள்ளார். 2022 டி20 உலகக் கோப்பையில் இருந்து ஒவ்வொரு டி20 போட்டியிலும் அவர் இந்தியாவை வழிநடத்தியுள்ளார். கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் லெவன் அணியில் ராகுல் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலே ராகுலுக்கு பதில் பார்மில் இருக்கும் சுப்மான் கில்க்கு வாய்ப்பு தர வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். ராகுலுக்கு கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஆதரவு உள்ளது, மேலும் 3வது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடலாம். நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் மார்ச் 1 முதல் 5 வரை நடைபெறுகிறது, 4வது டெஸ்ட் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் 9 முதல் 13 வரை நடைபெறுகிறது.
கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணி: ரோஹித் ஷர்மா (C), கேஎல் ராகுல், எஸ் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கேஎஸ் பாரத், இஷான் கிஷன், ஆர்.அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஆர்.ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷ்ரேயாஸ் ஐயர் , சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.
மேலும் படிக்க | IPL 2023: கண்ணீர் கடலில் ரசிகர்கள்... தோனி - விராட் மோதிக்கொள்ளும் அந்த கடைசி போட்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ