IND vs AUS, Virat Kholi Record: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று முன்தினம் (பிப். 17) தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில், 263 ரன்களை எடுத்திருந்தது. அதிகபட்சமாக கவாஜா 81, ஹாண்ட்கம்ப் 72 ரன்களை எடுத்திருந்தனர். தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணிய 262 ரன்களை எடுத்தது. லயான் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், அக்சர் படேல் 74 ரன்களையும், அஸ்வின் 37 ரன்களையும் எடுத்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 113 ரன்களை சுருண்டது. ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து, 115 ரன்கள் என்ற இலக்கை, இந்திய அணி இன்றைய மூன்றாவது நாளின் இரண்டாவது செஷனிலேயே எட்டிப்பிடித்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
In histh Test, @cheteshwar1 finishes off the chase in style#TeamIndia secure a -wicket victory in the second #INDvAUS Test here in Delhi
Scorecard https://t.co/hQpFkyZGW8@mastercardindia pic.twitter.com/Ebpi7zbPD0
— BCCI (@BCCI) February 19, 2023
மேலும் படிக்க | IPL 2023: கண்ணீர் கடலில் ரசிகர்கள்... தோனி - விராட் மோதிக்கொள்ளும் அந்த கடைசி போட்டி
இந்த வெற்றியின் மூலம், பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி தக்கவைத்துள்ளது. அடுத்த இரண்டு போட்டியை இந்தியா இழந்தாலும், தொடர் சமனில்தான் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு முக்கியமான உலக சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 44 ரன்களை எடுத்திருந்தார். சர்ச்சையான முறையில் நேற்று அவுட்டான விராட் கோலி, 8 ரன்கள் எடுத்தால், சர்வதேச அரங்கில் மொத்தமாக 25 ஆயிரம் ரன்களை மைல்கல்லை அடைவார் என கூறப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் அந்த சாதனையை விராட் கோலி அடைந்தார்.
Congratulations @imVkohli on reaching international runs in international cricket!
Simply sensational#TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/Ka4XklrKNA
— BCCI (@BCCI) February 19, 2023
அதாவது, சர்வதேச அரங்கில் 25 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த முதல் வீரர் என்ற அசூர சாதனையை படைத்தார். விராட் கோலி இந்த சாதனையை 549 போட்டிகளில் படைத்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் 577 போட்டிகளில் 25 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார். இதன்மூலம்தான், சச்சினின் நீண்டகால சாதனையை விராட் கோலி தகர்த்தார். விராட், சச்சினை அடுத்து ரிக்கி பாண்டிங் 588 போட்டிகளிலும், ஜாக் கால்லீஸ் 594 போட்டிகளிலும், குமார் சங்கக்காரா 608 போட்டிகளிலும், மகேளா ஜெயவர்தனே 701 போட்டிகளிலும் 25 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, சச்சினை அடுத்து 25 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் விராட் கோலி அடைந்தார். சச்சின் மொத்தம் 34, 357 ரன்களை எடுத்துள்ள நிலையில், விராட் கோலி அந்த சாதனை முறியடிப்பாரா என்ற ரசிகர்கள் விராட் கோலியை எதிர்பார்ப்பை முன்வைக்கின்றனர்.
மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே விளையாடும் போட்டிகள்... முழு விவரம் - மார்க் பண்ணி வச்சுக்கோங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ