தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு 2023க்கு பிறகு, இந்திய அணி இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.  அடுத்த ஆண்டு கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு இந்த தொடர் முக்கியமானதாக இருக்கும் என்பதால், இந்த ஆஸ்திரேலியா தொடர் இந்திய அணிக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.  உலகக் கோப்பை முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகு நவம்பர் 23 ஆம் தேதி டி20 தொடர் தொடங்கும் என்பதால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டிகளுக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ஷுப்மான் கில், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகிய பல முக்கிய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஓய்வளிக்க வாய்ப்புள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | DRS தொழில்நுட்பத்தை சாதகமாக பயன்படுத்துகிறதா இந்திய அணி...? - குவியும் குற்றச்சாட்டுகள்!


மேலும், சையத் முஷ்டாக் அலி டிராபியில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வீரர்களான ரியான் பராக் போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணி மிகவும் புதியதாக இருக்க உள்ளது.  ஆசிய கிரிக்கெட் போட்டியில் விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் டாப்-ஆர்டர் பேட்டராக தேர்வு செய்யப்படுவார்கள். சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ரியான் பராக் மற்றும் பேக்-அப் கீப்பர்-பேட்டர் ஜிதேஷ் ஷர்மா ஆகியோரைக் கொண்ட மிடில் ஆர்டருடன் திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் அணியில் இடம் பெற கூடும்.  


ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டு வருவதால், உலகக் கோப்பைக்கு பிறகு அவர் நீண்ட நாட்கள் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே, ஆஸ்திரேலிய தொடரில் சிவம் துபே மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் ஆல்ரவுண்டர்களாக இருப்பார்கள்.  பாண்டியா இல்லாத நிலையில், ஆஸ்திரேலியா டி20 போட்டிகளுக்கான கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவை இந்தியா நியமிக்கலாம். பவுலிங்கில் பும்ராவைத் தவிர, அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக இடம் பெறுவார்கள். 



ஆஸ்திரேலியா டி20 போட்டிகளுக்கான உத்ததேச இந்திய அணி: 
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (WK), ரின்கு சிங், ரியான் பராக், ஜிதேஷ் சர்மா (WK), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா (C), அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் , யுஸ்வேந்திர சாஹல்


இந்திய டி20 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி: மேத்யூ வேட் (கேப்டன்), ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ் டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா.


மேலும் படிக்க | அரையிறுதியில் இந்தியாவுடன் மோதப்போவது இந்த அணிகள் தானா... அப்போ கப் ரோஹித்துக்கு தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ