DRS தொழில்நுட்பத்தை சாதகமாக பயன்படுத்துகிறதா இந்திய அணி...? - குவியும் குற்றச்சாட்டுகள்!

ICC World Cup 2023: நடப்பு உலகக் கோப்பை தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை இந்திய அணி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றியை குவித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : Nov 6, 2023, 04:04 PM IST
  • இந்திய அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
  • முதல் அரையிறுதியில் இந்திய அணி விளையாட உள்ளது.
  • டிஆர்எஸ் தொழில்நுட்பம் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
DRS தொழில்நுட்பத்தை சாதகமாக பயன்படுத்துகிறதா இந்திய அணி...? - குவியும் குற்றச்சாட்டுகள்! title=

ICC World Cup 2023, DRS Technology: நடப்பு ஆடவர் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) இந்திய அணி விளையாடிய 8 லீக் போட்டியிலும் வெற்றி பெற்று வீழ்த்த முடியாத பலத்துடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. மேலும், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளதால் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வான்கடேவில் இந்தியா விளையாட இருப்பதும் உறுதியாகிவிட்டது. 12 ஆண்டுகளுக்கு பின் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா உள்ளது. நவ. 15, 19ஆம் தேதியை எதிர்நோக்கி இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

இந்திய அணி (Team India) நடப்பு தொடரில் சிறிய அணிகளை மட்டுமின்றி ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பெரு அணிகளையும் எந்த சிரமுமின்றி எளிதாக வென்றது குறிப்பிட்டாக வேண்டும். சொந்த மண்ணில் இந்திய அணி தனது ஆதிக்கத்தை வெளிக்காட்டினாலும், பேட்டிங், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு என அனைத்து பிரிவிலும் மற்ற அணிகளையும் அடக்கி ஆள்கிறது. இந்திய அணியின் இத்தகைய வெற்றி சில பேருக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க | அரையிறுதியில் இந்தியாவுடன் மோதப்போவது இந்த அணிகள் தானா... அப்போ கப் ரோஹித்துக்கு தான்!

டிஆர்எஸ் தொழில்நுட்பம் (DRS Technology) மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளும், புகார்களும் தொடர் தொடங்கியதில் இருந்தே வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான நேற்றைய போட்டிக்கு பலரும் கடுமையான குற்றச்சாட்டை சமூக வலைதளங்களில் முன்வைத்து வருகின்றனர். அதில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராஸா, இந்தியா தனது வெற்றிக்காக டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்வதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். 

இதில், கிளாசென் ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் டிஆர்எஸ் மூலம் அவுட்டானது தற்போது சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அது குறித்து ஹசன் ராஸா கூறுகையில்,"ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார் மற்றும் சிறந்த பந்துவீச்சுடன் நிறைவு செய்தார். டிஆர்எஸ் எடுக்கப்படும் தொழில்நுட்பத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதில் வான் டெர் டஸ்ஸன் (ஆனால் ஹென்ரிச் கிளாசென்) பேட்டிங் செய்தார் மற்றும் பந்து லெக் ஸ்டம்பில் பிட்ச் செய்யப்பட்ட பிறகு மிடில் ஸ்டம்பைத் தாக்கியது. அது எப்படி சாத்தியம். 

இம்பாக்ட் இன் லைனில் இருந்தது, ஆனால் பந்து லெக் ஸ்டம்பை நோக்கி சென்றது. எல்லோரையும் போலவே நானும் என் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று நான் சொல்கிறேன். டிஆர்எஸ் சிலருக்கு சாதகமாக மாற்றப்படுகிறது, அது தெளிவாகத் தெரிகிறது" என்றார். மேலும், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் மட்டும் இந்தியா ஆதிக்கம் செலுத்துவது ஏன் என்றும் நடப்பு தொடரில் இந்திய அணிக்கு எதிராக மட்டும் ஏன் மற்ற அணிகள் சுமாராக விளையாடுகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். 

மேலும் படிக்க | இந்தியாவுடன் மோசமான தோல்வி... இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக கலைப்பு - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News