இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். பேட்டிங் மற்றும் கேப்டன்சி என மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அதிக அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். ரோஹித் சர்மா கடைசியாக விளையாடிய 8 டெஸ்ட் இன்னிங்ஸில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார். மேலும் அதன் பிறகு நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளிலும் ரன்கள் அடிக்கவில்லை. தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர்-கவாஸ்கர் தொடரிலும் ரன்கள் அடிக்காதது விமர்சனங்களை கிளப்பி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? மௌனம் கலைத்த பிசிசிஐ


5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்டில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய ரோஹித் சர்மா, இரண்டாவது போட்டியில் அணிக்கு திரும்பினார். கேஎல் ராகுல் ஓப்பனிங்கில் நன்றாக ஆடியதால் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மிடில் ஆர்டரில் பேட் செய்தார், ஆனாலும் ரன்கள் அடிக்க முடியவில்லை. தற்போது மெல்போர்னில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஓப்பனிங் இறங்கினார். ஆனாலும் வழக்கம் போல சொற்ப பந்துகளில் ஆட்டமிழந்தார். 5 பந்துகள் 3 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ரோஹித் சர்மாவின் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ளது.



இந்திய அணிக்கு 340 ரன்கள் இலக்கு


ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு 340 ரன்களை இலக்காக வைத்துள்ளது. இந்நிலையில் 2வது இன்னிங்ஸில் ரோஹித் ஷர்மா பேட்டிங்கில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அனைத்து விமர்சகர்களையும் தர்க்க முடியும். ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மார்க் வாக் ரோஹித் சர்மாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து சிறந்த வீரர்களும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வருகிறார்கள். நான் மட்டும் இந்திய தேர்வாளராக இருந்தால், ரோஹித் சர்மாவிற்கு தன்னை நிரூபிக்க ஒரு கடைசி வாய்ப்பு கொடுப்பேன், அதிலும் தோல்வியடைந்தால் அடுத்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக நியமிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.


"நான் இப்போது இந்திய அணியின் தேர்வாளராக இருந்தால், இரண்டாவது இன்னிங்ஸில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்து முடிவு எடுப்பேன். அங்கும் ரன்கள் அடிக்கவில்லை என்றால், ரோஹித் உங்கள் சேவைக்கு நன்றி. நீங்கள் ஒரு சிறந்த வீரராக இருந்தீர்கள் என்று கூறுவேன்" என மார்க் வாக் தெரிவித்துள்ளார். ரோஹித் ஷர்மா ஒரு கேப்டனாகவும் சிறப்பாக செயல்படவில்லை என்று மார்க் வாக் விமர்சித்துள்ளார். இந்தியாவிற்கு அவர் செய்த பங்களிப்புகளின் காரணமாக அவருக்கு இவ்வளவு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது என்று மார்க் வாக் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும் படிக்க | மெல்போர்ன் டெஸ்ட் : இந்திய அணி வெற்றி பெறுமா? இதுவரை அதிகபட்ச சேஸ் இதுதான்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ